பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள்


பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள்
x

பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் நடந்தன.

அரியலூர்

தாமரைக்குளம்:

அரியலூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை சார்பில், வள்ளலார் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கலைப்போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பேச்சுப்போட்டி, எழுத்துப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளில் இருந்து கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.


Next Story