சரக அளவிலான விளையாட்டு போட்டியில் சூலாமலை அரசு பள்ளி மாணவர்கள் சாதனை


சரக அளவிலான விளையாட்டு போட்டியில்  சூலாமலை அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
x
தினத்தந்தி 23 Sept 2022 12:15 AM IST (Updated: 23 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சரக அளவிலான விளையாட்டு போட்டியில் சூலாமலை அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

கிருஷ்ணகிரி

பர்கூர் சரக அளவிலான விளையாட்டு போட்டி அஞ்சூர்- ஜெகதேவி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இந்த போட்டிகளில் பர்கூர் சரக அளவில் 48 அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் சூலாமலை அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர். இந்த பள்ளி மாணவர் சச்சின்குமார் 17 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் 3 ஆயிரம் மீட்டர் மற்றும் 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடமும், பெண்கள் பிரிவில் மாணவிகள் ஐஸ்வர்யா 2-வது இடமும், மதுமிதா 3-வது இடமும் பிடித்து சாதனை படைத்தனர்.

மேலும் 14 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் மாணவி ஷாலினி 600 மீட்டரில் 3-ம் இடம் பிடித்தார். சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் பத்மபிரியா, ஆசிரியர்கள் பரத்குமார், கனிமொழி, பப்பில்லா ஆரோக்கியமேரி, விஜயலட்சுமி, சபிதா தனலட்சுமி மற்றும் ராமன் உள்ளிட்டோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story