அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் நடத்தியதாக பா.ஜ.க.வினர் மீது புகார்

அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் நடத்தியதாக பா.ஜ.க.வினர் மீது புகார் அளிக்கப்பட்டது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே ஒச்சம்பட்டியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் மத்திய மந்திரி வி.கே.சிங் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இந்த நிலையில் இந்நிகழ்ச்சி பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், அரசியலுக்காக நடத்தியதாகவும், ஏற்கனவே பயனாளிக்கு நிதி ஒதுக்கப்பட்டு பணி நடைபெறுகிற இடத்தில் அடிக்கல் நாட்டியதாகவும், உள்ளாட்சி அமைப்பு நிர்வாகம், அரசு அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்காமல் இந்நிகழ்ச்சி நடத்தியதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க கோரி அதே பகுதியை சேர்ந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வார்டு உறுப்பினர் முருகானந்தம், கலெக்டர் மெர்சி ரம்யாவிடம் புகார் மனு அளித்தார்.
Related Tags :
Next Story