தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நிதிநிறுவன ஊழியர்கள் மீது புகார்
தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நிதிநிறுவன ஊழியர்கள் மீது பெயிண்டர் குடும்பத்தினர் புகார் தெரிவித்தனர்.
தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு நேருஜி நகரை சேர்ந்தவர் கருப்பசாமி. பெயிண்டர். இவர் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில், எனக்கு 2 மனைவிகள். 2 பேரும் சேர்ந்து சிறுதொழில் செய்வோருக்கு தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று கொடுத்து வந்தனர். கடன் பெற்று செல்பவர்களிடம் தினமும் காலையில் பணத்தை வசூல் செய்து நிதிநிறுவனத்தில் செலுத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த வாரத்தில் 2-வது மனைவிக்கு உடல் நிலை சரியில்லாததால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அந்த நேரத்தில் நிதி நிறுவன ஊழியர்கள் வீட்டில் வந்து கடனை வசூலிப்பதற்காக எனது முதல் மனைவியை மனதளவில் துன்புறுத்தி உள்ளனர். இதனால் அவர் விஷம் குடித்து இறந்து விட்டார். எனது மனைவியின் இறப்புக்கு காரணமான நிதி நிறுவன ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.தூத்துக்குடி, ஜூலை.2-
தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு நேருஜி நகரை சேர்ந்தவர் கருப்பசாமி. பெயிண்டர். இவர் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில், எனக்கு 2 மனைவிகள். 2 பேரும் சேர்ந்து சிறுதொழில் செய்வோருக்கு தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று கொடுத்து வந்தனர். கடன் பெற்று செல்பவர்களிடம் தினமும் காலையில் பணத்தை வசூல் செய்து நிதிநிறுவனத்தில் செலுத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த வாரத்தில் 2-வது மனைவிக்கு உடல் நிலை சரியில்லாததால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அந்த நேரத்தில் நிதி நிறுவன ஊழியர்கள் வீட்டில் வந்து கடனை வசூலிப்பதற்காக எனது முதல் மனைவியை மனதளவில் துன்புறுத்தி உள்ளனர். இதனால் அவர் விஷம் குடித்து இறந்து விட்டார். எனது மனைவியின் இறப்புக்கு காரணமான நிதி நிறுவன ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.