மகனை தாக்கியதாக தந்தை மீது புகார்


மகனை தாக்கியதாக தந்தை மீது புகார்
x

மகனை தாக்கியதாக தந்தை மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் அருகே உள்ள வானகிரி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி சுதா. இவர்களுக்கு மதன்(வயது 24) என்கிற மகன் உள்ளார். கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக சுதா, மகனுடன் அதே பகுதியில் தனியாக வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ராஜேந்திரன், ஒரு சிலருடன் சுதா வீட்டிற்கு வந்து மகனை அடித்து உதைத்து காரைக்காலில் உள்ள மனநல காப்பகத்தில் சேர்த்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பூம்புகார் போலீசில் சுதா புகார் அளித்தார். அதில், தனது கணவர் தன்னையும், மகன் மதனையும் தாக்கி தன்னிடம் இருந்த நகைகளை எடுத்துச் சென்றதாக கூறியிருந்தார். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.





Next Story