போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வியாபாரி மீது புகார்


போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வியாபாரி மீது புகார்
x

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வியாபாரி மீது புகார் செய்யப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேற்று காலையில் மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில், ஆதித்தமிழர் பேரவை கலைக்கண்ணன், புரட்சி பாரதம் நெல்சன் மற்றும் பலர் வந்தனர். அவர்கள் கொடுத்த புகார் மனுவில், "நெல்லை சந்திப்பு பகுதியில் வியாபாரி ஒருவர் காலாவதியான பொருட்களை மக்களுக்கு விற்பனை செய்து வருகிறார். மேலும் அந்த நபர் ஒரு சமுதாயத்தை சேர்ந்தவரை இழிவாக பேசியுள்ளார். இதனை சி.டி.யில் பதிவு செய்துள்ளோம். இதுகுறித்து விசாரணை நடத்தி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் போராட்டம் செய்வோம்" என்று கூறி இருந்தனர்.


Next Story