புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 11 Sept 2023 12:15 AM IST (Updated: 11 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

புகார் பெட்டி

கன்னியாகுமரி

குளத்தை தூர்வார வேண்டும்

கொட்டாரம் பேரூராட்சிக்குட்பட்ட அச்சன்குளம் கிராமத்தில் ஒரு குளம் உள்ளது. இந்த குளத்தை அப்பகுதி மக்கள் குளிப்பதற்கும், விவசாயத்துக்கும் பயன்படுத்தி வந்தனர். ஆனால், தற்போது குளம் முழுவதும் தாமரை கொடி படர்ந்தும், புதர் மண்டியும் காணப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் குளத்தை பயன்படுத்த முடியாத நிைல உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராம்தாஸ் சந்திரசேகர், சந்தையடி.

சேதமடைந்த மின்கம்பம்

பத்மநாபபுரத்தில் கோனார் தெரு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் உள்ள ஒரு மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து சேதமடைந்து காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் முறிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றிவிட்டு புதிய மின்கம்பத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மகேந்திரன், பத்மநாபபுரம்.

பஸ் வசதி தேவை

மணவாளக்குறிச்சி அருகே வடக்கன்பாகம் ஊர் உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். ஆனால் இந்த பகுதி மக்கள் பஸ் வசதிக்காக மணவாளக்குறிச்சி சந்திப்பிற்கு பல்வேறு தேவைகளுக்காக ெசல்ல வேண்டி உள்ளது. எனவே பொதுமக்கள் நலன்கருதி இந்த ஊருக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ராஜேஷ் கோபால், மணவாளக்குறிச்சி.

பழுதடைந்த சுவிட்ச்

கீழ்குளம் பேரூராட்சிக்குட்பட்ட இனயம் இனியநகர் மற்றும் பாலத்தில் இருந்து கருங்கல் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள தெருதெரு விளக்குகள் சிலவற்றில் சுவிட்ச் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால், தெருவிளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே பழுதடைந்த சுவிட்சை அகற்றி விட்டு புதிய சுவிட்ச் பொருத்தி சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அப்துல் ரசாக், இனயம்.

குப்பைகளை அகற்ற வேண்டும்

தோவாளை ஆற்றங்கரையில் இருந்து ஒரு தனியார்கல்லூரிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரம் சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசி சுகாதார சீா்ேகடு ஏற்பட்டு வருவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்றி கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-காா்த்திக், ேகாட்டாா்.


Next Story