புகார் பெட்டி


புகார் பெட்டி
x

புகார் பெட்டி

கன்னியாகுமரி

நடவடிக்கை எடுப்பார்களா?

ஈத்தாமொழியில் இருந்து ராஜாக்கமங்கலம் செல்லும் மேற்கு கடற்கரை சாலையில் பண்ணையூர் உள்ளது. இந்த பகுதியில் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. அந்த பகுதி வளைவான இடம் என்பதால் வேகமாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த சாலையை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-நாகராஜன், ராஜாக்கமங்கலம்.

எரியாத விளக்குகள்

குளச்சலில் இருந்து மண்டைக்காடு செல்லும் சாலையில் வெட்டுமடை கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்து மண்டைக்காடு சந்திப்பு வரை சாலையோர மின்கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள மின்விளக்குகள் பழுதடைந்து பல மாதங்களாக எரியாமல் காணப்படுகிறது. இதனால், இரவு ேநரம் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் சிரமத்துக்குள்ளாவதுடன், அச்சத்துடனேயே பயணம் செய்து வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி பழுதடைந்த விளக்குகளை அகற்றி விட்டு புதிய விளக்குகளை பொருத்தி எரியவைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அமீன், குளச்சல்.

பயணிகள் அவதி

தமிழக-கேரள எல்லையில் முக்கிய இடமாக களியக்காவிளை அமைந்துள்ளது. இங்கு தினமும் பல்வேறு தேவைகளுக்காக இரு மாநில மக்களும் பஸ்சில் வந்து செல்கின்றனர். இதனால் 24 மணிநேரமும் பஸ் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. திறந்தவெளி பஸ்நிலையமாக காணப்படும் இங்கு புதிய பஸ்நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் அந்த பணிகள் மந்தமாக நடைபெற்று வருவதால் பஸ்சுக்காக மழை, வெயிலில் காத்து நின்று பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, புதிய பஸ்நிலைய பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அபுதாய்ரு, குளச்சல்.

விபத்து அபாயம்

காப்புக்காடு சந்திப்பில் இருந்து தேங்காப்பட்டணம், ஐரேனிபுரம் ஊர்களுக்கு இரு சாலைகள் பிரிந்து செல்கின்றன. இந்த முக்கிய சந்திப்பு பகுதியில் சாலையின் ஓரத்தில் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், கடைகளுக்கு வரும் பயணிகள் வாகனங்களை சாலையிலேயே நிறுத்துகின்றனர். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், சாலையில் வேகமாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, மக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலை பகுதியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வினு, குன்னத்தூர்.

பழுதடைந்த மின்விளக்கு

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட ஹவ்வா நகர் உள்ளது. இந்த பகுதியில் உள்ள மின்கம்பத்தில் தெருவிளக்கு பழுதடைந்து எரியாமல் காணப்படுகிறது. இதனால், இரவு நேரம் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பழுதடைந்த விளக்கை அகற்றி விட்டு புதிய மின்விளக்கை பொருத்தி எரியவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜன், வேதநகர்.

சேதமடைந்த சாலை

அழகியபாண்டியபுரத்தில் இருந்து காட்டுப்புதூர் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகுகிறார்கள். மேலும் வாகன ஓட்டிகள் விபத்திலும் சிக்கி வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வே.பொன்ராஜ், காட்டுப்புதூர்.


Next Story