புகார் பெட்டி


புகார் பெட்டி
x

புகார் பெட்டி

கன்னியாகுமரி

வாகன ஓட்டிகள் அவதி

கருங்கல் பேரூராட்சிக்குட்பட்ட 12 மற்றும் 13-ம் வார்டு பகுதியில் அரசு நடுநிலை பள்ளி முதல் பத்ரேஸ்வரி அம்மன் கோவில் வரை உள்ள மின்கம்பங்களில் விளக்குகள் பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பழுதடைந்த விளக்குகளை அகற்றி விட்டு புதிய விளக்குகள் அமைத்து எரிய வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அ.பழனிவேல், பாலவிளை.

விபத்து அபாயம்

ஈத்தாமொழி-ராஜாக்கமங்கலம் மேற்கு கடற்கரை சாலையில் பண்ணையூர் உள்ளது. இந்த பகுதியில் சாலையின் நடுவே பள்ளம் ஏற்பட்டுள்ளது. மழை நேரங்களில் பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் அந்த வழியாக வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆ.நாகராஜன், ராஜாக்கமங்கலம்.

மரத்தை அகற்ற வேண்டும்

உண்ணாமலைக்கடை பேரூராட்சிக்குட்பட்ட உண்ணாமலைக்கடை அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் வளாகத்தில் காம்பவுண்டு சுவர் அருகில் ராட்சத மரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தால் சுவர் சேதமடைந்து வருகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனேயே கடந்து செல்கின்றனர். எனவே, ஆபத்தை ஏற்படுத்தும் மரத்தை வெட்டி அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அருண், உண்ணாமலைக்கடை.

குப்பைகள் அகற்றப்படுமா?

நாகர்கோவில் மாநகராட்சி 26-வது வார்டுக்கு உட்பட்ட குளத்தூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் குப்பைகள் முறையாக அகற்றப்படுவதில்லை. இதனால், குப்பைகள் அந்த பகுதியில் தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சீராக குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

-டி.சேகர், ஊட்டுவாழ்மடம்.

ஓடை தூர்வாரப்படுமா?

ஆரல்வாய்மொழி அழகியநகர், பொய்கை நகர் குடியிருப்பு பகுதிகளின் நடுவில் கழிவுநீர் ஓடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஓடையை முறையாக தூர்வாரி பாராமரிக்காததால் கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால்,அந்த பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, கழிவுநீர் ஓடையை துர்வாரி கழிவு நீர் வடிந்தோட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரோகித், அழகியநகர்.


Next Story