புகார் பெட்டி


புகார் பெட்டி
x

புகார் பெட்டி

கன்னியாகுமரி

சாலை சீரமைக்கப்பட்டது

அஞ்சுகிராமம் பஸ் நிலையத்தின் வெளியே சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து கரடு முரடாக காணப்பட்டது. இதனால், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளானதுடன், அடிக்கடி விபத்தில் சிக்கி வந்தனர். இதுபற்றி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைத்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

நடவடிக்கை தேவை

நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் சபரி அணை உள்ளது. இந்த அணையில் தண்ணீர் நிரம்பி மறுகால் பாயும் பகுதியில் மரம் வேருடன் சாய்ந்து கிடக்கிறது. பல மாதங்களாக அந்த மரம் அகற்றப்படாமல் காணப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த மரத்தையும், தேங்கி கிடக்கும் குப்பைகளையும் அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-காசி, வடிவீஸ்வரம்.

கொடிகளை அகற்ற வேண்டும்

குலசேகரத்தில் இருந்து திற்பரப்பு செல்லும் சாலையில் கான்வென்ட் சந்திப்பு அருகே ஒரு மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தில் கொடிகள் படர்ந்து காணப்படுகிறது. இதனால், மின்தடை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்கம்பத்தில் படர்ந்துள்ள கொடியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தேவதாஸ், குலசேகரம்.

விபத்து அபாயம்

தோவாளை மெயின்ரோட்டில் கற்பக விநாயகர் திருமண மண்டபம் எதிரில் சாலையோரம் ஒரு மின்கம்பம் இருந்தது. இந்த மின்கம்பம் மாற்றியமைத்தபோது, பழைய கம்பத்தின் அடிப்பகுதியை சரியாக அகற்றப்படாமல் காணப்படுகிறது. இதனால், கம்பிகள் வெளியே நீண்டு காணப்படுவதால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோரம் காணப்படும் மின்கம்பத்தின் எஞ்சிய பகுதியை முறையாக அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தா.தங்கப்பன், தோவாளை.

சீரமைக்க வேண்டும்

நுள்ளிவிளை 'ஆ' ஊராட்சிக்கு உட்பட்ட கண்டன்விளை பகுதியில் ஒரு முந்திரி ஆலை உள்ளது. இந்த ஆலையின் அருகில் சாலையோரம் பதிக்கப்பட்டிருந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், சாலையில் குடிநீர் வெளியேறி வருவதால், அந்த வழியாக செல்லும் வாகனங்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குழாய் உடைப்பை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும்.

-அனிஷ்குமார், கண்டன்விளை.

வாகன ஓட்டிகள் அவதி

அருவிக்கரை பேரூராட்சிக்குட்பட்ட மாத்தூர் பகுதியில் புகழ்பெற்ற மாத்தூர் தொட்டிப்பாலம் உள்ளது. தொட்டி பாலத்திற்கு கீழ் ஆற்றுப்பாலம் செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் சுற்றுலா வாகனங்கள், உள்ளூர் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அடிக்கடி விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுனில் ராஜேஷ், முதலார்.


Next Story