தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
பராமரிப்பற்ற சாலை
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் சாத்தியார் அணையில் உள்ள பொதுப்பணித்துறை பாலத்தில் இருந்து மைல்கல் வரை உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் சாலையின் இருபுறமும் முட்செடிகள் வளர்ந்து இருப்பதால் பஸ்சில் செல்லும் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே பராமரிப்பற்ற இந்த சாலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைக்க வேண்டும்.
பொதுமக்கள், தெத்தூர்.
பூங்கா வேண்டும்
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில் எவ்வித பொழுது போக்கு இடம் இல்லை. இதனால் பொதுமக்கள் குழந்தைகளுடன் பொழுதினை போக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் தூர்வாரும் பணி நடந்து வரும் பெரிய கண்மாய் கரையை அகலப்படுத்தி மரங்கள், செடிகள் வைத்து நடைபயிற்சியுடன் கூடிய பூங்கா அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
காதர்மீரா, ஆர்.எஸ்.மங்கலம்.
ஆக்கிரமிப்பு
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா கீழடி ஊராட்சி பசியாபுரம் திருவள்ளுவர் தெருவில் ஆக்கிரமிப்பு நிைறந்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அருண்பாண்டி, கீழடி.
சுகாதார சீர்கேடு
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் கூமாப்பட்டியிலிருந்து கான்சாபுரம் செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளது. இந்த சாலை திறந்தவெளி கழிவறை போல காட்சியளிக்கிறது. பொதுக்கழிவறை இருந்தும் அதை பொதுமக்கள் பயன்படுத்துவதில்லை. இந்நிலை தொடர்ந்தால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுகாதார சீர்கேட்டை சரிசெய்ய வேண்டும்.
பொதுமக்கள், கூமாப்பட்டி.
ரேஷன் கடை வேண்டும்
மதுரை மாநகராட்சி 23-வது வார்டு கீழகைலாசபுரம், தாகூர் நகர் கண்மாய்கரை பகுதியில் 2 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. இருப்பினும் இங்கு ரேஷன் கடை இல்லை. இதனால் ரேஷன் பொருட்கள் வாங்க முதியோர்கள், பெண்கள் நீண்ட தூரம் போக வேண்டிய நிலை உள்ளது. எனவே இங்கு ரேஷன் கடை கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
சந்தனகுமார், கீழகைலாசபுரம்.
நாய்கள் தொல்லை
மதுரை 73-வது வார்டுக்கு உட்பட்ட கிருஷ்ணா நகர், முத்துபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்துவதால் பொதுமக்கள் சாலையில் நடக்க மிகவும் அச்சப்படுகின்றனர். மேலும் நாய்கள் இருசக்கர வாகனங்களின் மீது மோதுவதால் அவ்வப்போது சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. எனவே சாலைகளில் சுற்றித் திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிஞ்சி சேகர், மதுரை.
குண்டும், குழியுமான சாலை
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மேற்கு 66-வது வார்டு மெயின் ரோடு, கோச்சடை ஆகிய பகுதிகளில் உள்ள காளை அம்பலகாரர் தெரு சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த தெருவில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். மழைக்காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் ேதங்குவதால் பொதுமக்கள் சாலையில் நடக்க மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க சிரமப்படுகின்றனர். எனவே குண்டும், குழியுமான இந்த சாலையை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ராஜன், கோச்சடை.
பஸ்வசதி
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய பகுதிகளுக்கு செல்ல போதுமான பஸ்வசதி இல்லை. இதனால் இப்பகுதியில் உள்ள மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே மேற்கண்ட பகுதியில் கூடுதலாக பஸ் இயக்கினால் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறுவர்.
ஆகாஷ், வத்திராயிருப்பு.
விபத்து ஏற்படும் அபாயம்
மதுரை மாவட்டம், கே.புதூர் டி.எம்.பி. வங்கி எதிரில் உள்ள மின்கம்பத்தின் வயரில் பேனர் ஒன்று சிக்கி உள்ளது. இதனால் வயர் உரசி தீப்பற்றும் அபாயம் உள்ளது. இந்த பகுதிக்கு ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்த மின்கம்பத்தினால் ெபாதுமக்கள் அனைவரும் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விபத்து ஏற்படும் முன்னர் இதை சரிசெய்ய வேண்டும்.
மோகன், மதுரை.
பொதுமக்கள் அச்சம்
ராமநாதபுரம் நகரில் நாளுக்கு நாள் நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. நாய்க்கடியால் தினமும் பலர் பாதிக்கப்படுகின்றனர். தெருவில் நடந்து செல்பவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் நாய்கள் துரத்தி, துரத்தி கடிக்கிறது. இதனால் தெருவில் செல்லவே பொதுமக்கள் அச்சம் அடைகின்றனர். பொதுமக்களின் நலன்கருதி தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.
ராஜா, ராமநாதபுரம்.