தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
விபத்து ஏற்படும் அபாயம்
மதுைர மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையம் நெடுஞ்சாலையில் ஆலம்பட்டி மேம்பாலத்திற்கு அருகே சாலையோரம் உள்ள தடுப்பு வேலியானது சில நாட்களுக்கு முன் நடந்த விபத்தால் முற்றிலும் சேதமடைந்து உள்ளது. இதனால் இரவு நேரங்களில் வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே விபத்துகள் ஏதேனும் நடைபெறும் முன் இந்த சாலையோர தடுப்பு வேலியை சீரமைக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுரேஷ், திருமங்கலம்.
வாகனஓட்டிகள் அவதி
மதுரை பெத்தானியாபுரம் சிக்னலில் இருந்து அண்ணாநகர் மெயின் ரோடு வரை செல்லும் சர்வீஸ் சாலை சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் இந்த சாலையில் அடிக்கடி சிறு,சிறு விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே வாகனஓட்டிகளின் நலன் கருதி இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
முத்து, மதுரை.
பஸ்கள் நின்று செல்லுமா?
மதுைர உத்தங்குடி பஸ்நிறுத்தத்தில் அதிக அளவிலான மாநகர பஸ்கள் நின்று செல்வதில்லை. இதனால் பள்ளி-கல்லூாிகளுக்கு செல்லும் மாணவா்களும் வேலைக்கு செல்பவா்களும் தாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் முதியவா்களும், கா்ப்பிணிகளும் பஸ்சிற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இங்கு அனைத்து பஸ்களும் நின்று செல்ல அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜா, உத்தங்குடி.