தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
வாருகால் வசதி தேவை
விருதுநகர் மாவட்டம் வீரசெல்லையாபுரம் ஊராட்சி ஆதிதிராவிடர் காலனி பகுதியில் போதிய வாருகால் வசதி இல்லாத காரணத்தால் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. மேலும் மழைக்காலங்களில் கழிவுநீருடன் மழைநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உருவாகி நோய்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதை சீரமைக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், வீரசெல்லையாபுரம்.
குண்டும்-குழியுமான சாலை
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு எஸ்.ராமச்சந்திராபுரத்தில் போடப்பட்ட சாைல குண்டும் குழியுமாக மோசமான நிலையில் உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி பழுதாவதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைத்துதர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,.
பொதுமக்கள், எஸ்.ராமசந்திரபுரம்.
குடிநீா்தொட்டி பயன்பாட்டிற்கு வருமா?
மதுரை மாவட்டம் அரும்பனூர் ஊராட்சி யா.தேக்கங்குளம் 5-வது வார்டில் புதிதாக கட்டப்பட்ட குடிநீர் தொட்டி உள்ளது. ஆனால் இந்த குடிநீர் தொட்டி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவில்லை. இந்த குடிநீர் தொட்டி பயன்பாட்டிற்கு வந்தால் மக்கள் குடிநீருக்காக அலைய வேண்டிய நிலை தவிர்க்கப்படும். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரியசாமி, யா.தேக்கங்குளம்.
கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுமா?
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து நகைப்பறிப்பு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்ள் நடக்கிறது. இதனால் இந்த பகுதி மக்கள் தங்களின் அன்றாட தேவைகளுக்கு வெளியே செல்வதற்கே மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், நாிக்குடி.
குரங்குகள் தொல்லை
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் ம.வெல்லாலபட்டியில் மக்்கள் குடியிருப்பு பகுதிக்குள் சில நாட்களாக குரங்குகளின் தொல்லை அதிகாித்து காணப்படுகிறது. இந்த குரங்கள் சாலைகளில் செல்லும் மக்களை பயமுறுத்துவதால் பொதுமக்கள் வீீட்டை விட்டு வெளியே செல்வதற்கே அச்்சப்படுகின்றனா். மேலும் விவசாயிகளின் மா, பலா, தென்னை போன்ற மரங்களையும் சேதப்படுத்துகின்றன. எனவே குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மெய்யன், ம.வெல்லாலப்பட்டி.
ஆபத்தான பள்ளம்
விருதுநகா் மாவட்டம் சாத்தூா் நான்கு வழிச்சாலையில் திருமண மண்டபத்திற்கு அருகே குடிநீா் குழாய்க்காக சாலையோரம் தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் உள்ளது. இதனால் இரவுநேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான பள்ளத்தை உடனே மூடுவதற்கு அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கணேசன், சாத்தூா்.
நடைபாதையை சீரமைக்க வேண்டும்
விருதுநகா் மாவட்டம் ஆனையூா் பஞ்சாயத்து காந்திநகா் பாரப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள தெருக்களின் நடைபாதைகள் மோசமான நிைலயில் உள்ளது. மேலும் மழைக்காலங்களில் சேரும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனா். எனவே இந்த தெருக்களில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முத்துலெட்சுமி, ஆனையூா்.
பஸ் வசதி வேண்டும்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் வழிமறிச்சான் கிராமத்தில் பஸ் வசதி இல்லை. இப்பகுதியில் இருந்து வெளியூருக்கு வேலைக்கு செல்பவா்களும் பள்ளி-கல்லூாி மாணவா்களும் சிரமப்படுகின்றனா். மேலும் கா்ப்பணிகளும், முதியவா்களும் பஸ்வசதி இல்லாத காரணத்தால் மிகவும் பாதிக்கப்படுகின்றனா். எனவே இந்த பகுதிக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தர அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சீதாராம், பரமக்குடி.