'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருவாரூர்

'தினத்தந்தி' புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை அடுத்த பேரளம் பகுதி ரெயில்வே கேட் இறக்கத்தில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதனால் அந்த வழியாக கனரக வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. குறிப்பாக அறுவடை எந்திரங்களை எடுத்து செல்ல முடியாமல் விவசாயிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், அந்த பகுதிகளில் வீடுகளை ஒட்டியபடி செல்வதால் பொதுமக்களும் அச்சத்துடன் காணப்படுகின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் மேற்கண்ட பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வரதராஜன், கிள்ளியூர்.


Next Story