புகார் பெட்டி


புகார் பெட்டி
x

புகார் பெட்டி

கன்னியாகுமரி

நடவடிக்கை எடுக்கப்படுமா?

நாகர்கோவில் புத்தேரியில் பெரியகுளம் உள்ளது. இந்த குளத்தின் எதிரே சாலையோரத்தில் ஏராளமான வயல்கள் உள்ளன. இந்த வயல்களின் ஓரத்தில் சிலர் கட்டிட கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே, அந்த பகுதிகளில் கொட்டப்பட்டுள்ள கட்டிட கழிவுகளை அகற்றுவதுடன், அவற்றை கொட்டுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-லியோ, புத்தேரி.

சீரான குடிநீர் தேவை

தெள்ளாந்தி ஊராட்சிக்குட்பட்ட மண்ணடி கிராமத்தில் கடந்த 3 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால், அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.நாராயணசாமி, பூதப்பாண்டி.

மின்கம்பத்தை அகற்ற வேண்டும்

வில்லுக்குறி பேரூராட்சி பண்டாரக்காடு ஸ்டார் தெருவில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் ஒன்று ஒகி புயலின்போது சேதமடைந்தது. அதன்பிறகு அந்த கம்பத்தின் அருகில் புதிய மின்கம்பமும் அமைக்கப்பட்டது. ஆனால், சேதமடைந்த மின்கம்பம் இதுவரை அகற்றப்படவில்லை. மேலும், அந்த கம்பத்தில் இருந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்த வண்ணம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அ.ஜாண்பீட்டர், பண்டாரக்காடு.

சுகாதர சீர்கேடு

கீழ்குளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட காளியார்தோட்டம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் வடிகால் ஓடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், விழுந்தயம்பலம் பகுதியில் இருந்து சானல் வழியாக வரும் தண்ணீர் சாலையில் பாய்கிறது. சில நேரங்களில் இறந்த உயிரினங்களும் அடித்து வரப்படுகிறது. இதனால், அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் வடிகால் ஓடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பால்ராஜ், அரசகுளம்.

பயணிகள் அவதி

நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ்நிறுத்தத்தில் இறங்கும் பயணிகள் அருகில் உள்ள வாகன நிறுத்தம் வழியாக நடந்து செல்வது வழக்கம். மழை நேரங்களில் பயணிகள் இறங்கும் பகுதியில் உள்ள பள்ளத்தில் தண்ணீர் ேதங்கி காணப்படுகிறது. இதனால், பயணிகள் பள்ளத்தை கடந்து செல்ல பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ்நிறுத்தம் பகுதியில் மழைநீர் தேங்காத வகையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜன்,கீழசரக்கல்விளை.

ஆபத்தான தெரு விளக்கு

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட சரக்கல்விளை சானல் கரையில் அமைந்துள்ள மின்கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள விளக்கு சேதமடைந்து தொங்கியபடி காணப்படுகிறது. காற்றின் வேகத்தில் எப்போது வேண்டுமானாலும் அந்த வழியாக செல்வோர் மீது விழுந்து விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே, சேதமடைந்த விளக்கை அகற்றி விட்டு புதிய விளக்கை பொருத்தி எரியவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆன்ரோ டெகோசிங் ராஜன்,வேதநகர்.


Next Story