புகார் பெட்டி


புகார் பெட்டி
x

புகார் பெட்டி

தென்காசி

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற

வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள்

தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தெரு விளக்கு எரியுமா?

தென்காசி நகராட்சி பகுதிக்கு உட்பட்ட கீழப்பாளையம் தெருவில் உள்ள மின்மிளக்கு கடந்த சில நாட்களாக எரியவில்லை. இதனால் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

ஆகாஷ், தென்காசி.

குடிநீர் குழாயில் உடைப்பு

கடையம்-முதலியார்பட்டி சாலையில் அய்யம்பிள்ளையார்குளம் அருகே குடிநீர் குழாயில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய கேட்டுக் கொள்கிறேன்.

முகம்மது இப்ராகிம், முதலியார்பட்டி.

சுகாதாரக்கேடு

வீரகேரளம்புதூர் தாலுகா கீழக்கலங்கல் நடுத்தெரு, வடக்கு தெரு மற்றும் ஓடைத்தெருவில் சாக்கடையில் கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் சுகாதார கேடு ஏற்படுவதுடன், நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த பகுதியில் சுகாதார சீர்க்கேட்டை போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

கே.எஸ்.கணேசன், கீழக்கலங்கல்.

சாலையை சீரமைக்க வேண்டும்

கீழப்பாவூர் யூனியன் ஆவுடையானூர் மெயின் ரோட்டில் பல மாதங்களாக சாலை குண்டும், குழியுமாக கிடக்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும், அடிக்கடி நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகிறார்கள். எனவே, வாகன ஓட்டிகளின் நலன் கருதி இந்த சாலையை சீரமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

திருக்குமரன், கடையம்.

சுகாதார வளாகம் கட்டப்படுமா?

கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரி பஸ் நிறுத்தத்தில் இருந்து தினமும் ஏராளமான பயணிகள் பஸ்சில் செல்கிறார்கள். ஆனால், இங்கு சுகாதார வளாகம் இல்லை. இதனால் இங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் அவதிப்படுகிறார்கள். நகராட்சி சார்பில் பாப்பான் கால்வாய் கரையோரத்தில் சுகாதார வளாகம் கட்ட வேண்டும் என்று மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, பொதுமக்கள் நலன் கருதி இந்த பகுதியில் சுகாதார வளாகம் கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

சுமீனா பாத்திமா, கடையநல்லூர்.


Next Story