புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சாலையில் கொட்டப்படும் குப்பைகள்
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா பெரும்பச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட மெயின் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள சாலையில் சிலர் கழிவுநீர் மற்றும் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் இந்த பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு நிறைந்துள்ளது. எனவே இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாண்டி, நாகநாதபுரம்.
நூலகம் சீரமைக்கப்படுமா?
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அரசு கிளை நூலகம் பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள வாசகர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜமீல், தேவகோட்டை.
ஆக்கிரமிப்பு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பஜார் பகுதியில் ஆக்கிரமிப்பு நிறைந்துள்ளது. இதனால் பஜாருக்கு வருவோர் மிகவும் அவதிப்படுகின்றனர். இந்த ஆக்கிரமிப்பை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
முகமது, காரைக்குடி.
தெருநாய்கள் தொல்லை
சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூரில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நாய்கள் சாலையில் செல்வோரை துரத்தி சென்று அச்சுறுத்தி வருகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் வெளியே செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே மக்களை அச்சுறுத்தும் இந்த தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முருகன், பள்ளத்தூர்.
கூடுதல் பஸ் இயக்கப்படுமா?
சிவகங்கை மாவட்டம் நாகவயல் பகுதியில் இயக்கப்படும் பஸ்கள் போதுமானதாக இல்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் கூடுதல் பஸ் இயக்கிட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், நாகவயல்.