புகார்பெட்டி


புகார்பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சிவகங்கை

தெருநாய்கள் தொல்லை

சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் பேரூராட்சியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. இந்த தெருநாய்கள் சாலையில் செல்லும் வாகனங்களின் மீது மோதுவதால் அவ்வப்போது சிறு, சிறு விபத்துகள் நிகழந்த வண்ணம் உள்ளது. எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். முருகன், பள்ளத்தூர்.

வாகன ஓட்டிகள் அவதி

சிவகங்கை மாவட்டம் புழுதிபட்டி- பொன்னமராவதி நெடுஞ்சாலையில் உள்ள கே.புதுப்பட்டியில் சாலையோரத்தில் குப்பைகள் எரியூட்டப்படுகிறது. இதன் காரணமாக சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் புகை மூட்டத்தில் சிக்கி பெரும் அவதிக்குள்ளாகினர். மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையோரத்தில் குப்பைகளை எரிப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள், கே.புதுப்பட்டி.

கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே தர்மபட்டியில் உள்ள வையாபுரி கண்மாயில் சீமைக்கருவேல மரங்கள் கண்மாயை முழுவதும் ஆக்கிரமித்து மழைநீர் சேமிக்க முடியாத நிலை உள்ளது. பருவ மழை தொடங்கும் முன்பாக இந்த சீமைக்கருவேல மரங்களை அகற்றி மழைநீரை சேமிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சுதர்சனம், எஸ்.புதூர்.

குரங்குகள் தொல்லை

சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூரில் குரங்குகளின் தொல்லை அதிகமாக உள்ளது. இந்த குரங்குகள் வீடுகளின் உள்ளே புகுந்து சாப்பாட்டை தின்று விட்டு செல்கிறது. மேலும் பாத்திரங்கள் அனைத்தையும் தூக்கி வீசிவிடுகிறது. எனவே இந்த குரங்குகளை பிடிக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். முருகன், சிவகங்கை.

தேங்கி கிடக்கும் குப்பைகள்

சிவகங்கை மாவட்டத்தின் நகர் பகுதிகளில் சில இடங்களில் சாலையோரத்தில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதனால் இந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே நகர் பகுதிகளில் குப்பைகள் தேங்காதவாறு அவ்வப்போது அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள், சிவகங்கை.


Next Story