தினத்தந்தி புகார்பெட்டி


தினத்தந்தி புகார்பெட்டி
x

புகார்பெட்டி

மதுரை

ஒளிராத தெருவிளக்குகள்

மதுரை மாநகராட்சி அனுப்பானடி 89-வது வார்டு, சூசை மைக்கேல் தெருவில் உள்ள தெருவிளக்குகள் எரிவதில்லை. இதனால் இப்பகுதியில் இரவு நேரங்களில் திருட்டு சம்பவங்கள் நடக்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஒளிராத தெருவிளக்குகளை அகற்றி புதிய தெருவிளக்குகளை பொருத்த வேண்டும்.

ரங்கசாமி, அனுப்பானடி.

பணி விரைந்து முடிக்கப்படுமா?

மதுரை மாவட்டம் சமயநல்லூர் ஊராட்சி அக்ரகாரத்தில் சாலை மேம்பாட்டிற்காக தொடங்கிய பணியானது சாலை தோண்டப்பட்ட நிலையில் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் தடுமாறுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

அசோக்குமார், சமயநல்லூர்.

குப்பைத்தொட்டி அமைக்க வேண்டும்

மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் கோவிலில் இரவு நேரங்களில் பலர் கூடுவார்கள். சிறந்த பொழுதுபோக்குவதற்கு ஏற்ற இடமாக தெப்பக்குளம் விளங்கி வரும் நிலையில் மாலைநேர கடைகளில் உணவு பொருட்களை வாங்கி விட்டு குப்பைகளை குளத்தின் ஓரத்தில் போட்டு செல்கிறார்கள். இதனால் குளமானது மாசடைந்து வருகிறது. எனவே இப்பகுதியில் குப்பைகளை போட குப்பைத்தொட்டியினை அதிகாரிகள் அமைக்க வேண்டும்.

பொதுமக்கள், மதுரை.

மின்சாரம் விரயம்

மதுரை மாவட்டம் சிம்மக்கல் பாலத்தில் அமைந்துள்ள உயர் கோபுர மின்விளக்குகள் பகலிலும் எரிகிறது. இதனால் மின்சாரம் விரயமாகும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பகலில் எரியும் தெருவிளக்கை அணைக்க வேண்டும்.

பிரேம், சிம்மக்கல்.

சேதமடைந்த சாலை

மதுரை சித்திராகாரா தெரு சாலையின் இருபுறமும் குண்டு குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே சேதமடைந்த சாலையை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சந்தனகுமார், சித்திராகாரா தெரு.


Next Story