தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

புகார் பெட்டி

ராமநாதபுரம்

அடிப்படை வசதிகள் வேண்டும்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சி வாரச்சந்தைக்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர். ஆனால் இங்கு வருவோர்களுக்கு முறையான குடிநீர் உள்பட அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் இங்கு வரும் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே சந்தைக்கு வரும் பொதுமக்களுக்கு அனைத்து விதமான அடிப்படை வசதிகள் செய்துதர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குமார், பரமக்குடி.

உடைந்த சாக்கடை மூடிகள்

ராமநாதபுரம் நகரில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்த பாதாள சாக்கடையின் பல்வேறு இடங்களில் உள்ள மூடிகள் உடைந்து உள்ளது. இதனால் கழிவுநீர் சாலையில் வெளியேறி வருகிறது. மேலும் சாலையில் தேங்கிய கழிவுநீரால் பொதுமக்கள், வாகனஓட்டிகள் அவதியடைகின்றனர். எனவே பாதாள சாக்கடை மூடிகளின் உடைப்பை சரிசெய்ய சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இப்ராகிம், ராமநாதபுரம்.

சேதமடைந்த சாலை

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து வேங்கிட்டன்குறிச்சி செல்லும் சாலை பயன்படுத்த முடியாத வகையில் சேதமடைந்து காணப்படுகிறது. சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் அவதியடைகின்றனர். மேலும் வாகனஓட்டிகள் அவ்வப்போது விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் உள்ள சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், பரமக்குடி.

செயல்பாட்டிற்கு வருமா?

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் இருந்து அருப்புக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள வங்கி ஏ.டி.எம். செயல்படாமல் உள்ளது. இதனால் இங்கு வருவோர் மிகுந்த ஏமாற்றத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக பெண்கள், முதியோர் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த ஏ.டி.எம். எந்திரத்தை சரிசெய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்று கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், சாயல்குடி.

பணி முடிவடையுமா?

ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் மேற்கு தெருவில் சீரற்ற மின்சார வினியோகத்தை சரி செய்யும் நோக்கத்தில் வடக்கு தெரு ஜாமியா மஸ்ஜித் பள்ளியின் மையவாடி சுற்று சுவர் அருகில் டிரான்ஸ்பார்மர் வைப்பதற்காக மின் கம்பம் மட்டும் அமைக்கப்பட்டு உள்ளது.இந்த பணி தற்போது வரை முடிவடையாததால் இப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே விரைந்து டிரான்ஸ்பார்மர் அமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சலீம், புதுமடம்.


Next Story