புகார் பெட்டி


புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டி

தென்காசி

சுரங்கப்பாதையில் மின்விளக்கு வசதி

தென்காசி மாவட்டம் கடையம் அருகே ரவணசமுத்திரத்தில் இருந்து மீனாட்சிபுரம் செல்லும் சாலையில் மாலிக்நகர் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக ரெயில்வே சுரங்கபாதை அமைக்கப்பட்டது. ஆனால், இந்த சுரங்கபாதையில் மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் இரவு நேரத்தில் இந்த சுரங்கபாதை இருளில் மூழ்கி காணப்படுவதால் அந்த வழியாக செல்ல பெண்கள் அச்சப்படுகிறார்கள். மேலும், இந்த சுரங்கப்பாதை ராமநதி ஆற்றங்கரையோரம் அமைந்திருப்பதால் இரவு நேத்தில் விஷ ஜந்துக்கள் அதிக அளவில் நடமாடுகின்றன். எனவே, சுரங்கப்பாதையில் மின்விளக்குகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

அம்ஜத், முதலியார்பட்டி.

* பொட்டல்புதூரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். மையம் ஒன்று உள்ளது. அதில் மின்விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் போதிய வெளிச்சம் இல்லை. எனவே நன்றாக வெளிச்சம் கொண்ட மின்விளக்குகளை பொருத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

முகம்மது இப்ராகிம், முதலியார்பட்டி.

தேங்கி கிடக்கும் மழைநீர்

ஆலங்குளம் தாலுகா பெத்தநாடார்பட்டியில் சரியான முறையில் வாறுகால் வசதி அமைக்கப்படாததால் மழைநீர் வடிந்து செல்ல முடியாமல் சாலையில் தேங்கி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே, மழைநீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முருகன், பெத்தநாடார்பட்டி.

மின்விளக்கு எரியவில்லை

கடையம் யூனியன் மேலாம்பூர் பஞ்சாயத்து கருத்தபிள்ளையூரில் மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை. எனவே, அனைத்து மின்விளக்குகளும் சரியாக எரிவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

கிறிஸ்டோபர், கருத்தபிள்ளையூர்.

ஓடை தூர்வாரப்படுமா?

வீரகேரளம்புதூர் தாலுகா கீழக்கலங்கல் பெரிய கிராமத்தில் மூன்று மதகு பகுதியில் இருந்து ஊத்துமலை குளத்துக்கு ஓடை வழியாக தண்ணீர் செல்கிறது. இந்தநிலையில் ஓடையில் புதர்கள் மண்டி கிடப்பதாலும், குப்பைக்கூளங்கள் கொட்டப்பட்டு இருப்பதாலும் தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டு தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, மூன்று மதகு பகுதியில் இருந்து மேலக்கலங்கல் பாலம் வரைக்கும் ஓடையை தூர்வாருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

தட்சிணாமூர்த்தி, கீழக்கலங்கல்.



Next Story