தினத்தந்தி புகார் பெட்டி
புகார் பெட்டி
கிடப்பில் பராமரிப்பு பணி
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே செஞ்சடை நாதபுரம்-பெருநாழி சாலையில் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் கற்கள் பெயர்ந்து மண்ரோடாக காட்சியளிக்கிறது. சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். சிறு, சிறு விபத்துகள் நடந்து வரும் இந்தச்சாலையில் பெரும் அசம்பாவிதம் நேரும் முன்னர் அதிகாரிகள் கிடப்பில் போடப்பட்டுள்ள பராமரிப்பு பணியை விரைவில் தொடங்க வேண்டும்.
தடுமாறும் வாகனங்கள்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்கமுடியாமல் வாகனஓட்டிகள் தடுமாறுகிறார்கள். எனவே அதிகாரிகள் இந்தப்பகுதி சாலையை சீரமைக்க வேண்டும்.
கட்டிடம் விரிவாக்கம் செய்யப்படுமா?
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நோயாளிகள் அதிக அளவில் வருவதால் இடநெருக்கடி ஏற்படுகிறது. இதனால் அந்த மருத்துவமனைக்கு வருபவர்கள் வெளியில் காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே அதிகாரிகள் இந்த கட்டிடத்தை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குண்டும், குழியுமான சாலை
ராமநாதபுரம் மாவட்டம் ராஜசிங்கமங்கலம் அருகே ஆனந்தூர் பகுதி சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே அதிகாரிகள் இந்தப்பகுதி சாலையை சீரமைக்க வேண்டும்.
நடவடிக்கை எடுக்கப்படுமா?
ராமநாதபுரம் மாவட்டம் மாயாகுளம் ஊராட்சி கொம்பூதி கிராமம் வழியாக ராமநாதபுரம் செல்லும் சாலையோரங்களில் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடிவதில்லை. எனவே அதிகாரிகள் இந்த கருவேலமரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.