புகார் பெட்டி


புகார் பெட்டி
x

புகார் பெட்டி

கன்னியாகுமரி

முழுமையாக சீரமைக்க வேண்டும்

நாகர்கோவில் சவேரியார் கோவில் சந்திப்பில் இருந்து செட்டிகுளம் வரை உள்ள சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் திட்ட பணிக்காக குழாய்கள் பதிக்கப்பட்டது. தற்போது சாலை சீரமைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு சில இடங்களில் முழுமையாக சீரமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக வாகனங்கள் செல்லச் செல்ல சாலை முழுவதும் சேதமடைய வாய்ப்புகள் உள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை முழுமையாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முகேஷ், கோட்டார்.

தடுப்பணைகள் அமைக்கப்படுமா?

குமரி மாவட்டத்தில் மழை காலங்களில் பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் கோதையாற்றில் திறக்கப்பட்டு கடலில் வீணாக கடலில் கலக்கிறது. இதை தடுக்க கோதையாற்றில் ஆங்காங்கே தடுப்பணைகள் அமைத்து வீணாகாமல் தண்ணீரை சேமித்து கோடைகாலத்தில் பயன்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முருகன், பைங்குளம்.

சேதமடைந்த மின்கம்பம்

திருவிதாங்கோடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிருஷ்ணன்கோவில் தெருவில் இருந்து கேரளபுரம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பம் சேதமடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த வண்ணம் காணப்படுகிறது. இதனால், எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்

-தினு, கேரளபுரம்.

சுகாதார சீர்கேடு

விளாத்துறை ஊராட்சிக்கு உட்பட்ட மாராயபுரம் கருவாதலைவிளை பகுதியில் தனியார் மாட்டுப்பண்ணை உள்ளது. இந்த பண்ணையில் வெளியேறும் கழிவுகள் அப்பகுதியில் உள்ள சாலைகளில் தேங்கி நிற்கிறது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பண்ணையில் இருந்து வெளியேறும் கழிவுகளை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பி.ஜெயின், மாராயபுரம்.

வாகன ஓட்டிகள் அவதி

நாகர்கோவில் கோட்டார் சவேரியார் ஆலய சந்திப்பில் இருந்து செட்டிகுளம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் இருந்து ஈஸ்வரபுரத்துக்கு செல்லும் தெருவில் சாலையின் நடுவே மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தை வேறு இடத்தில் மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராசிக், டி.வி.டி.காலனி, கோட்டார்.

வேகத்தடை தேவை

நாகர்கோவில் மணிமேடை சந்திப்பில் இருந்து அண்ணா பஸ்நிலையம் வழியாக கோட்டார் செல்லும் சாலை உள்ளது. அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே இந்த சாலைக்கு வந்து திரும்பும் போது மணிமேடை பகுதியில் இருந்து வரும் இருசக்கர வாகனங்கள் வேகத்தை கட்டுப்படுத்தாமல் செல்கின்றன. இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகளின் வேகத்தை கட்டுப்படுத்த அண்ணா பஸ்நிலையம் முன்பு சாலையில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுபாஷ், கோட்டார்.


Next Story