புகார் பெட்டி


புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சிவகங்கை

சாலை வசதி தேவை

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஊராட்சி கிருஷ்ணா நகரில் சாலை வசதி இல்லை. இதனால் இங்கு வசிக்கும் மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். அடிக்கடி விபத்தும் நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராம், காளையார்கோவில்.

வாகன ஓட்டிகள் அவதி

சிவகங்கை மாவட்டம் நாலுகோட்டை பகுதி சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வசந்தா, நாலுகோட்ைட.

குவிந்து கிடக்கும் குப்பை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகர் பகுதி சாலைகளில் குப்பைகள் அதிக அளவில் குவிந்து கிடக்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சரவணன், காரைக்குடி.

சேதமடைந்த சாலை

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே ஏத்தமுத்துக்கண்மாய்-திராணி சாலை அமைத்து பல ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் இந்த சாலையானது சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும் சாலையோரம் ஆக்கிரமிக்கப்பட்டும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை சீரமைக்க வேண்டும்.

ஜான்கென்னடி, காளையார்கோவில்.

வீணாகும் நீர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நாச்சியார்புரம் மற்றம் சாத்தனூர் பகுதியில் தற்போது பெய்த மழை காரணமாக கண்மாய்களில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் குடியிருப்பு பகுதியில் வெள்ளம் புகும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நீரை சரியான முறையில் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், திருப்பத்தூர்.

சேதமடைந்த மின்கம்பம்

சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை அருகே சங்கராபுரம் பகுதியில் உள்ள மின்கம்பங்கள் பழுதாகிய நிலையில் காட்சியளிக்கிறது. இதனால் இந்த மின்கம்பங்கள் அமைந்துள்ள சாலையை கடக்க பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இந்தப்பகுதியில் அமைந்துள்ள மின்கம்பங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மணிமாறன், சாக்கோட்டை.


Next Story