தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

புகார் பெட்டி

ராமநாதபுரம்

விபத்து அபாயம்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா ஆண்டாவூரணி-அறிவித்தி கிராமம் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும்,குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்கமுடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். மேலும் சாலையில் சிறு, சிறு விபத்துகளில் வாகன ஓட்டிகள் சிக்கிவருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் சாலையை சீரமைக்க வேண்டும்.

சேதமடைந்த ரேஷன்கடை

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா முகில்தகம் கிராமத்தில் உள்ள ரேஷன்கடையானது சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த கடைக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த ரேஷன்கடையை சீரமைக்க வேண்டும்.

சாலை சீரமைக்கப்படுமா?

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை யூனியன் சிறுகம்பையூர் ஊராட்சி கஞ்சகோன்வயல். பூனைகுட்டிவயல் கிராமங்களுக்கு செல்லும் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக பள்ளி செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த சாலையை தார்ச்சாலையாக மாற்றி அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கருவேல மரங்களால் ஆக்கிரமிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கண்மாய்களில் நீர்வரத்து அதிக அளவில் உள்ளது. இந்த நிலையில் இப்பகுதி கண்மாய்கரைகளில் கருவேல மரங்கள் போன்றவற்றால் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால் இப்பகுதியில் நீர் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்மாய்கரைகளில் உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.

சீரமைக்க நடவடிக்கை ேதவை

ராமநாதபுரதம் மாவட்டம் சேதுபதி நகர் 4-வது தெருச்சாலை சேதமடைந்து பல்லாங்குழியாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். மேலும் சிறு, சிறு விபத்துகளில் வாகன ஓட்டிகள் சிக்குகிறார்கள். எனவே பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் சேதமடைந்த சாலையை சரிசெய்ய வேண்டும்.


Next Story