புகார் பெட்டி
புகார் பெட்டி
சுகாதார சீர்கேடு
வடிவீஸ்வரம் முத்தாரம்மன் கோவில் அருகே கழிவுநீர் ஓடை உள்ளது. இந்த ஓடை முறையாக பல ஆண்டுகளாக தூர்வாரி பராமரிக்காமல் காணப்படுகிறது. மேலும், சிலர் குப்பைகளையும் ஓடையில் கொட்டுகின்றனர். இதனால், ஓடையில் தண்ணீர் வடிந்தோட வழியில்லாமல் தேங்கி நிற்பதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாயை துர்வாரி கழிவுநீர் வடிந்தோட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நரேஷ், பறக்கை.
விபத்துகள் தடுக்கப்படுமா?
கன்னியாகுமரியில் இருந்து திருநெல்வேலி செல்லும் 4 வழிச்சாலை உள்ளது. விவேகானந்தபுரத்தில் இருந்து அகஸ்தீஸ்வரத்துக்கு செல்லும் சாலை ஏழுசாட்டுபத்து பகுதியில் 4 வழிச்சாலையை கடந்து செல்கிறது. இந்த பகுதியில் சாலையை கடக்கும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் போக்குவரத்து சிக்னல் விளக்குகள் மற்றும் தேவையான இடத்தில் வேகத்தடைகள் அமைத்து விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சி.ராமதாஸ், சந்தையடி.
நாய்கள் தொல்லை
குளச்சல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெருநாய்கள் அதிளவில் சுற்றித்திரிகின்றன. அவை சாலையில் செல்லும் பெண்கள், குழந்தைகள், வாகன ஓட்டிகளை விரட்டுவதும், கடிக்கவும் முயற்சிக்கிறது. இதனால், பெண்கள், குழந்தைகள், வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருநாய்களின் பெருக்கத்தை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அபுதாய்ரு, குளச்சல்.
தெருவிளக்கு அமைக்கப்படுமா?
ரீத்தாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட குறுப்பன்விளை உள்ளது. இந்த பகுதியில் பாம்புகள், விஷ பூச்சிகள் அதிகமாக காணப்படுகிறது. ஆனால், சாலையோரத்தில் தெருவிளக்குகள் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், இரவு நேரம் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் பெறும் அச்சத்துடனேயே அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் தெருவிளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வி.எஸ்.பி. ராஜன், குறுப்பன்விளை.
போக்குவரத்துக்கு இடையூறு
மத்திகோடு ஊராட்சிக்கு உட்பட்ட மாத்திரவிளையில் கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் தெற்கு பகுதியில் வடலிவிளைக்கு செல்லும் குறுகலான சாலையில் சிலர் குப்பைகள் மற்றும் கட்டிட கழிவுகளை கொட்டி வைத்துள்ளனர். இதனால், அந்த வழியாக செல்லும் பாதாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாலையில் கொண்டப்பட்டுள்ள குப்பைகள், கட்டிட கழிவுகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எஸ்.ஜார்ஜ கிறிஸ்டி, மத்திகோடு.
சேதமடைந்த சிலாப்புகள்
புன்னார்குளம் வேதமாணிக்கபுரத்தில் கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் எதிர்புறம் அஞ்சுகிராமத்தில் இருந்து மயிலாடி செல்லும் சாலையோரத்தில் மழைநீர்ஓடையின் மீது அமைக்கப்பட்டுள்ள சிமெண்டு சிலாப்புகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த சிமெண்டு சிலாப்புகளை அகற்றி விட்டு புதிய சிலாப்புகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எம்.ஆனந்த், புன்னார்குளம்.