புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 15 Sept 2022 9:59 PM IST (Updated: 15 Sept 2022 10:31 PM IST)
t-max-icont-min-icon

புகார் பெட்டி

கன்னியாகுமரி

குப்பைகள் அகற்றப்பட்டது

நாகர்கோவில் அறுகுவிளையில் திருவள்ளுவர் தெரு உள்ளது. இந்த தெருவில் அமைக்கப்பட்டுள்ள டிரான்ஸ்பார்மர் அருகில் சிலர் குப்பைகளை கொட்டி வந்தனர். இதனால், அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசி வந்தது. இதுபற்றி தினத்தந்தி புகார்பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து செய்தி வெளியிட்ட அன்றே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்றினர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

வீணாகும் குடிநீர்

ஈத்தாமொழியில் இருந்து ராஜாக்கமங்கலம் செல்லும் மேற்கு கடற்கரை சாலை உள்ளது. இந்த சாலையில் ராஜாக்கமங்கலம் துறை செல்லும் திருப்பத்தில் சாலையின் நடுவே பதிக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக பாய்ந்து கொண்டிருக்கிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, குழாய் உடைப்பை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆ.நாகராஜன், ராஜாக்கமங்கலம்.

காத்திருக்கும் ஆபத்து

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட சரக்கல்விளை சானல் கரையில் ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கம்பத்தில் மின் விளக்குக்காக பொருத்தப்பட்டுள்ள 'சுவிட்ச்' பெட்டி திறந்த நிலையிலும், தாழ்வாகவும் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் சிறுவர்கள் பெட்டியில் கைகளை வைத்து விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த பெட்டியை அகற்றி விட்டு புதிய பெட்டியை உயரமான இடத்தில் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆன்றோ டெகோசிங் ராஜன், வேதநகர்.

நடவடிக்கை தேவை

நாகர்கோவில் மாநகராட்சியில் பாதாள சாக்கடை பணிகளுக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், முக்கிய சந்திப்பு பகுதியான செட்டிகுளத்தில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. போக்குவரத்து நெரிசல் காரணமாக பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், அலுவலக பணியாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, காலை, மாலை நேரங்களில் அந்த பகுதியில் போக்குவரத்து போலீசார் அதிகளவில் பணியில் ஈடுபட்டு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆர்.எஸ்.ராஜன், வைத்தியநாதபுரம்.

சுகாதார சீர்கேடு

நாகர்கோவில் ஒழுகினசோியில் பழையாறு ஓடுகிறது. இந்த ஆற்றின் கரை பகுதிகளில் கட்டிட கழிவுகள், குப்பைகளை சிலர் கொட்டி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசி வருவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஆற்றின் கரைகளில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றுவதுடன், குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவராஜன், ஒழுகினசேரி.

பொதுமக்கள் அவதி

அருமநல்லூர் மேலத்தெரு மற்றும் வடக்கு தெருவில் குடிநீர் குழாய்கள் சாலையில் பதிப்பதற்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த குழாய்கள் வீடுகளின் வாசலில் ஒன்று மீது ஒன்றாக அடுக்கி வைத்துள்ளனர். இதனால், பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வருவதற்கு பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் குழாய்களை யாருக்கும் இடையூறு இல்லாத வகையில் வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-என்.குமார், அருமநல்லூர்.


Next Story