தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

புகார் பெட்டி

ராமநாதபுரம்

தேங்கி நிற்கும் கழிவுநீர்

ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் உள்ள தெருவில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக இந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் தேங்கிநிற்கும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பரித், பார்த்திபனூர்.

நோயாளிகள் அவதி

ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் நோயாளிகளுக்கு வீல் சேர், ஸ்ட்ரெச்சர் ஆகியவை போதிய எண்ணிக்கையில் இல்லை. மேலும் இருக்கும் ஒன்றிரண்டும் பழுதடைந்த நிலையில் உள்ளது. ஆம்புலன்ஸ்களில் வரும் அவசர நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருந்து சிரமப்படுகின்றனர். எனவே கூடுதல் வீல் சேர், ஸ்ட்ரெச்சர் ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரம்.

குண்டும், குழியுமான சாலை

ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் செல்லும் சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் வாகனங்கள் அவ்வப்போது சிறு, சிறு விபத்துக்களை சந்தித்து வருகிறது. எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், ராமநாதபுரம்.

நடவடிக்கை தேவை

ராமநாதபுரம் மதுரை செல்லும் சாலையில் உள்ள பெரிய கண்மாய் சுற்றியுள்ள பகுதி மது அருந்தும் பாராக மாறியுள்ளது. இதனால் கண்மாய் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே கண்மாயை சுற்றி தடுப்புச்சுவர் அல்லது வேலி அமைத்து கண்மாயை பாதுகாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், ராமநாதபுரம்.

சேதமடைந்த கட்டிடம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உள்ள கட்டிடமானது சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இங்கு வந்து செல்லும் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் வந்து செல்கின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த கட்டிடத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். குமார், பரமக்குடி.


Next Story