தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

புகார் பெட்டி

ராமநாதபுரம்

முட்புதர்கள் அகற்றப்படுமா?

ராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் தொண்டி முதல் தேவிபட்டினம் செல்லும் பாதையில் ரோட்டில் முட்புதர்கள் வளர்ந்து உள்ளது. இதனால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சாலையோரத்தில் வளர்ந்துள்ள முட்புதர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முகமது, திருப்பாலைக்குடி.

வாகன ஓட்டிகள் அவதி

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சிக்கு உட்பட்ட வடக்கு முதுகுளத்தூர் பகுதியில் உள்ள சாலை குண்டும், குழியுமாக காட்சிஅளிக்கிறது. இதனால் அந்த சாலையில் பயணிக்க முடியாமல் இருசக்கர வாகனஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். மேலும் சாலையில் பெயர்ந்து கிடக்கும் கற்கள் வாகனங்களையும் பழுதாக்குகிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பால்ராஜ், கமுதி.

சாலை அமைக்கப்படுமா?

ராமநாதபுரம் மாவட்டம் மாயாகுளம் ஊராட்சி புல்லந்தை கிராமத்தின் பின்புறத்தில் கொம்பூதி கிராமம் வழியாக ராமநாதபுரம் செல்லும் சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே இப்பகுதியில் புதிய சாலை அமைத்துதர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயராம், மாயாகுளம்.

போக்குவரத்து நெரிசல்

ராமநாதபுரம் நகர் அரண்மனை பகுதியில் அஞ்சலகம் தெரு மெயின் ரோட்டில் தினமும் எண்ணற்ற வாகனங்கள் செல்கின்றன. இங்கு சாலையோரத்தில் சிலர் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அசோக்குமார், ராமநாதபுரம்.

சேதமடைந்த நீர்தேக்க தொட்டி

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றியம் இலந்தைகுளம் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே விபத்து எதுவும் நிகழ்வதற்குமுன் இந்த நீர்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிய நீர்தேக்க தொட்டி கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள், கமுதி.


Next Story