தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

புகார் பெட்டி

மதுரை

தொற்று நோய் பரவும் அபாயம்

மதுரை மாவட்டம் கடச்சனேந்தல் கிராமம் அருகில் உள்ள பள்ளிக்கு செல்லும் சாலையின் ஓரத்தில் குப்பை குவிந்து கிடக்கிறது. இதனால் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பையை அவ்வப்போது அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெயமணி, கடச்சந்தல்.

சாலையில் ஓடும் கழிவுநீர்

மதுரை கிழக்கு தொகுதி 4-வது வார்டு ஆனையூர் கோசாகுளம் பெரியார் நகர் 2-வது தெருவில் பாதாள சாக்கடை நிரம்பி கழிவுநீர் சாலையில் செல்கிறது. இதனால் சாலையில் பயணிக்க முடியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் கழிவுநீரால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் கழிநீர் செல்வதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரமேஷ்குமார், மதுரை.

நடவடிக்கை எடுக்கப்படுமா?

மதுரை மாவட்டம் மைய நூலகத்தின் தரை தளத்திற்கு தினமும் ஏராளமான வாசகர்கள் பத்திரிகைகள் வாசிக்க வருகின்றனர். இங்த அறையில் உள்ள மின்விசிறிகளில் பல இயங்காமலும் சேதமடைந்த நிலையிலும் காணப்படுகிறது. இதனால் இங்கு வரும் வாசகர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இங்கு புதிதாக மின்விசிறி அமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுந்தரவடிவேல், மதுரை.

நாய்கள் தொல்லை

மதுரை மாவட்டம் பழைய மகாளிப்பட்டி ரோட்டில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்தி அச்சுறுத்துவதால் பொதுமக்கள் வெளியே செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அருண்குமார், மதுரை.

பஸ்வசதி வேண்டும்

மதுரை மாவட்டம் பெரியார் பஸ் நிலையத்திலிருந்து வாடிப்பட்டி வழியாக விராலிப்பட்டி, குலசேகரன்கோட்டை ஆகிய வழித்தடங்களில் இயக்கப்பட்ட பஸ்கள் தற்போது நிறுத்தப்பட்டதால் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பல கிலோமீட்டர் நடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே இந்த வழித்தடத்தில் மீண்டும் பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கவுரிநாதன், வாடிப்பட்டி.


Next Story