புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பஸ்வசதி வேண்டும்
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதுர் பகுதியில் இயக்கப்படும் பஸ்கள் போதுமானதாக இல்லை. எனவே கூடுதல் பஸ்கள் இயக்கிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜா, எஸ்.புதூர்.
கால்நடைகள் தொல்லை
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மாடுகள் மற்றும் நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இவைகள் சாலையில் செல்பவர்களை துரத்தி அச்சுறுத்துவதால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அச்சப்படுகின்றனர்.. எனவே சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
பொதுமக்கள், சிங்கம்புணரி.
குவிந்து கிடக்கும் குப்பை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகின்றது.. எனவே நகரில் குப்பைகள் குவியாதவாறு அவ்வப்போது அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், தேவகோட்டை.
பொதுமக்கள் அச்சம்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்தி அச்சுறுத்துவதால் பொதுமக்கள் வெளியே செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நசீமாபேகம், காரைக்குடி.
குண்டும்-குழியுமான சாலை
சிவகங்கை மாவட்டம் கல்லல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதி சாலையை சீரமைக்க வேண்டும்.
பொதுமக்கள், கல்லல்.