தினத்தந்தி புகார் பெட்டி
புகார் பெட்டி
சேதமடைந்த தரைத்தளம்
ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பஸ்கள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் இந்த பஸ் நிலையத்தின் தரைத்தளம் ஆங்காங்கே சேதமடைந்து உள்ளதால் இங்கு வரும் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த தரைத்தளத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குவிந்து கிடக்கும் குப்பை
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி எமனேசுவரம் பகுதியில் சுகாதாரப்பணிகள் தினமும் மேற்கொள்ளாததால் பல இடங்களில் குப்பைகள் தேங்கி உள்ளது. இதனால் இந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் தினமும் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அடிப்படை வசதி தேவை
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை. இங்கு கழிப்பறை, உடைமாற்றும் அறை போன்ற அடிப்படை வசதிகளை கூடுதலாக ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேதமான விளையாட்டு உபகரணங்கள்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி உடையார்பட்டி அருகே உள்ள சிறுவர் பூங்காவில் உள்ள குழந்தைகளின் விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து உள்ளன. இதனால் இங்கு வரும் குழந்தைகள் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த விளையாட்டு உபகரணங்களை புதிதாக மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடவடிக்கை தேவை
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா எஸ்.காவனூரில் உள்ள துணை சுகாதார நிலையம் குறித்த நேரத்தில் திறக்கப் படுவதில்லை. இதனால் கர்ப்பிணிகள், முதியோர்கள் வெங்கிடன் குறிச்சி மருத்துவமனைக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் உள்ள துணை சுகாதார நிலையத்தை குறித்த நேரத்தில் தினமும் திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.