புகார் பெட்டி
தென்காசி புகார் பெட்டி
பஸ் நிலையத்துக்குள் பேருந்துகள் வருமா?
பாபநாசத்தில் இருந்து தென்காசி வழியாக மதுைர, குமுளி, ராஜபாளையத்திற்கு இயக்கப்படும் பஸ்கள் தென்காசி மாவட்டம் கடையம் பஸ் நிலையத்திற்குள் வருவது இல்லை. மெயின் ரோட்டிலேயே பயணிகளை இறக்கிவிட்டு செல்கின்றது. இதனால் இந்த பஸ்சுக்காக பொதுமக்கள், பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் பஸ் நிலையத்தில் காத்துகிடந்து ஏமாற்றம் அடைகிறார்கள். எனவே அந்த பஸ்கள் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
திருக்குமரன், கடையம்.
பாலம் கட்ட வேண்டும்
கடையம் யூனியன் மேலாம்பூர் பஞ்சாயத்து கருத்தப்பிள்ளையூரில் கடனா ஆறு செல்கிறது. இந்த ஆற்றுக்கு வடக்கு பக்கம் விவசாய நிலம் உள்ளது. இந்த ஆற்ைற கடந்து விளைநிலங்களுக்கு செல்ல பாலம் வசதி இ்ல்லை. இதனால் அறுவடை எந்திரம், டிராக்டர்கள் உரம் அடிப்பதற்கு கொண்டு செல்வதற்கு மிகுந்த சிரமமாக உள்ளது. எனவே இந்த ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
கிறிஸ்டோபர், கருத்தப்பிள்ளையூர்.
பழுதடைந்த சாலைமேலநீதிதநல்லூர் ஒன்றியம் குருக்கள்பட்டி ஊராட்சி நெல்லை மெயின் ரோட்டில் இருந்து பிரிந்து கல்லத்திகுளம், அமுதாபுரம் செல்லும் ஒரு வழிச்சாலை சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். ஆகவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க கேட்டுக் கொள்கிறேன்.
வெள்ளத்துரை, குருக்கள்பட்டி.
மோசமான சுகாதார வளாகம்
கீழப்பாவூர் ஒன்றியம் பாவூர்சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ள இலவச பொது சுகாதார வளாகம் மக்கள் பயன்பாட்டிற்கு இல்லாமல் மிகவும் மோசமாக கிடக்கிறது. இதில் சிலர் மதுஅருந்தி வருகிறார்கள். எனவே இந்த பொது சுகாதார வளாகத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுகிறேன்.
தமிழ்குமரன், அரியப்பபுரம்.
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி தூண்கள் சேதம்
கரிவலம்வந்தநல்லூர் பஞ்சாயத்து ஒப்பனையாள்புரம் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தூண்கள் சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இதை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
அழகர், ஒப்பனையாள்புரம்.