புகார் பெட்டி
புகார் பெட்டி
சீரமைக்கப்பட்டது
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பீச்ரோடு பகுதியில் வலம்புரிவிளை குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கின் எதிரே செல்லும் சாலையின் தொடக்கத்தில் மழைநீர் வடிகால் ஓடையின் மீது அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் தளம் சேதமடைந்து காணப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதுபற்றி தினத்தந்தி புகாா்பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த பகுதியை சீரமைத்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றியை தெரிவித்தனர்.
மரத்தை அகற்ற வேண்டும்
ரீத்தாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட இரும்பிலியில் காக்கிறான் குளம் உள்ளது. இந்த குளத்தின் கிழக்கு கரை பகுதியில் பொதுமக்கள் குடியிருப்பு அருகில் பழமையான மரம் ஒன்று பட்டுப்போன நிலையில் நிற்கிறது. காற்றின் வேகத்தில் எப்போது வேண்டுமானாலும் மரம் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பட்டுப்போன நிலையில் காணப்படும் மரத்தை வெட்டி அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்
-ரவி, ரீத்தாபுரம்.
விபத்து அபாயம்
நாக்கோவில் கோட்டார் போலீஸ்நிலையம் சந்திப்பில் இருந்து சவேரியார் கோவில் சந்திப்புக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் குழாய் பதிக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு மூடப்பட்டன. ஆனால், அவை முறையாக சிரமைக்கப்படவில்லை. இதனால், இரவு நேரம் வேகமாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராசிராஜ், கோட்டார்.
தூர்வாரப்படுமா?
சிராயன்குழி பகுதியில் தம்பிரான்குளம் உள்ளது. இந்த குளத்தை அப்பகுதி மக்கள் குளிப்பதற்கும், விவசாயத்துக்கும் பயன்படுத்தி வந்தனர். தற்போது, முறையாக பராமரிக்காததால் குளம் முழுவதும் பாசி படர்ந்து காணப்படுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் குளத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பா.சதீஷ், சிராயன்குழி.
சாலையை சீரமைக்க வேண்டும்
கன்னியாகுமரியில் இருந்து கேரளாவுக்கு செல்லும் கடற்கரை சாலையில் புத்தளம் சந்திப்பு உள்ளது. இந்த சந்திப்பு பகுதியில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-டேவிட்சன், புத்தளம்.
சேதமடைந்த நிழற்குடை
ஆசாரிபள்ளம் செல்லும் சாலையில் நேசமணிநகர் பகுதியில் ராணிதோட்டம் அரசு பணிமனை உள்ளது. இந்த பணிமனை முன்பு அமைந்துள்ள பஸ் நிறுத்த நிழற்குடை ஒரு வாகனம் மோதியதில் சேதமடைந்தது. இதனால், பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் நிழற்குடையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பயணிகள் நலன்கருதி நிழற்குடையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஸ்ரீராம், ஆசாரிபள்ளம்.