தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

புகார் பெட்டி

ராமநாதபுரம்

சேதமடைந்த சாலை

ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலையில் இருந்து நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வரை உள்ள சந்தை திடல் ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த சாலையானது நகர் போக்குவரத்திற்கான பிரதான சாலையாக இருப்பதால் வாகனங்கள் செல்லும்போது சிறு, சிறு விபத்துகளும் நடக்கிறது. எனவே இந்த சாலையை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அன்வர்தீன், ராமநாதபுரம்.

குடிநீர் தட்டுப்பாடு

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றியம் நெறிஞ்சிப்பட்டி கிராமத்தில் கடந்த சில நாட்களாக குடிநீர் சரிவர வருவதில்லை.இதனால் இப்பகுதி மக்கள் குடிநீர் எடுக்க அருகில் உள்ள கிராமங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் சீரான குடிநீர் விநியோகம் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கமுதி.

சேதமடைந்த நீர்தேக்க தொட்டி

ராநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் சாயல்குடி பேரூராட்சி 15-வது வார்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் தெருவில் உள்ள நீர்தேக்க தொட்டி சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் தொட்டியில் விரிசல் ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வெளியேறி கொண்டே இருக்கிறது. எனவே இந்த நீர்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிய தொட்டி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜபாண்டியன், சாயல்குடி.

அனுமதியின்றி அள்ளப்படும் மண்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே தொட்டியவலசை கிராமத்தில் உள்ள கண்மாயில் அனுமதியின்றி சிலர் மண் அள்ளி வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதி கண்மாயில் மண் அள்ளப்படுவதை தடுக்க வேண்டும்.

சிவக்குமார், முதுகுளத்தூர்.

நடவடிக்கை வேண்டும்

ராமநாதபுரம் மாவட்டம் ஆர். எஸ். மங்கலம் தாலுகா திருப்பாலைக்குடி கிராமத்தில் கிழக்குக் கடற்கரை சாலையில் இருந்து திருப்பாலைக்குடி செல்லும் வழியில் நடுரோட்டில் அதிக மின்னழுத்தம் உள்ள மின் கம்பி ஒன்று கடந்து செல்கிறது. இதன் வழியாக வரும் வாகனங்கள் அதில் மோதி விபத்துக்குள்ளாகும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. தற்போது கிராம நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மின்வாரியம் இதனை சரி செய்து விபத்துக்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

முகமது, திருப்பாலைக்குடி.


Next Story