'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திண்டுக்கல்

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

நடுத்தெருவில் நிற்கும் மின்கம்பம்

குஜிலியம்பாறை கலைமகள் தெருவின் நடுவே மின்கம்பம் நிற்கிறது. இதனால் தெருவில் ஆட்டோவில் கூட வரமுடியவில்லை. இரவில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மின்கம்பத்தை மோதி விபத்தை சந்திக்கின்றனர். அந்த மின்கம்பத்தை மாற்றி தெருவின் ஓரத்தில் நடுவதற்கு மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஸ்டாலின், குஜிலியம்பாறை.

சாலையில் பள்ளம்

திண்டுக்கல் வடக்கு ரதவீதி சாலை சேதம் அடைந்து பெரிய பள்ளம் உருவாகி விட்டது. இருசக்கர வாகனங்களில் செல்வோர், சைக்கிளில் செல்லும் பள்ளி மாணவர்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். பலர் தடுமாறி பள்ளத்தில் விழுந்து விடுகின்றனர். சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராகவன், திண்டுக்கல்.

சாலையில் தேங்கிய கழிவுநீர்

கண்டமனூரில் இருந்து தேனிக்கு செல்லும் பிரதான சாலையின் ஓரம் அமைந்துள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேறி சாலையில் குளம் போல் தேங்கி நிற்கிறது. அதன் வழியாக தான் பொதுமக்கள் நடந்தும், இருசக்கர வாகனங்களிலும் செல்ல வேண்டியது இருக்கிறது. மக்கள் நடமாட முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுவதோடு, தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. அதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், கண்டமனூர்.

சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

திண்டுக்கல் மாநகராட்சி 1-வது வார்டு பி.வி.தாஸ் காலனியில் சாக்கடை கால்வாயில் மண் சேர்ந்து அடைப்பு ஏற்பட்டுவிட்டது. இதனால் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுவதோடு, கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.

-பொதுமக்கள், பி.வி.தாஸ் காலனி.

சேதம் அடைந்த மின்கம்பம்

திண்டுக்கல்லை அடுத்த நல்லமநாயக்கன்பட்டி மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு மின்கம்பம் சேதம் அடைந்து சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து விழுந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. அந்த மின்கம்பத்தை மாற்றிவிட்டு புதிய மின்கம்பம் நடவேண்டும்.

-மகேஷ்குமார், நல்லமநாயக்கன்பட்டி.

போக்குவரத்து நெரிசல்

பெரியகுளத்தில் மெயின்ரோட்டில் இருந்து பஸ் நிலையத்துக்கு பஸ்கள் திரும்பும் இடத்தில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், பெரியகுளம்.

சாலை சீரமைக்கப்படுமா?

வத்தலக்குண்டு புறவழிச்சாலையில் இருந்து பிரிந்து, எம்.வாடிப்பட்டிக்கு செல்லும் சாலை பல இடங்களில் சேதம் அடைந்துவிட்டது. சாலை முழுவதும் கற்கள் பரவி கிடப்பதால், இருசக்கர வாகனங்களில் செல்வோர் சறுக்கி விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாக்கியராஜ், வத்தலக்குண்டு.

மேல்நிலை குடிநீர் தொட்டி பராமரிப்பு

கடமலைக்குண்டுவை அடுத்த மயிலாடும்பாறை அருகே உள்ள காமன்கல்லூரில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி சேதம் அடையும் நிலையில் உள்ளது. எனவே மேல்நிலை குடிநீர் தொட்டியை முறையாக பராமரிக்க வேண்டும்.

-பொதுமக்கள், காமன்கல்லூர்.

-------

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.


Next Story