புகார் பெட்டி


புகார் பெட்டி
x

புகார் பெட்டி

மதுரை

தூசி படர்ந்த சாலை

மதுரை காளவாசல்- தேனி மெயின்ரோடு சாலையில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் வாகனஓட்டிகள் பயணிக்க முடியாத வகையில் தூசி படர்ந்து புகை மூட்டத்தை ஏற்படுத்துகிறது. இதனால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இதற்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கருப்பசாமி, காளவாசல்.

வாகனஓட்டிகள் அச்சம்

திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள ஓம் சக்தி நகரில் பஸ்கள், வேன்கள் செல்லும் போது மின்சார கம்பிகளில் உரசியபடி செல்கிறது. ஆங்காங்கே மின்சார கம்பிகள் அபாயகரமாக கீழே தொங்கிய நிலையில் காணப்படுகின்றன. இதனால் வாகனஓட்டிகள் மின்சார கம்பிகள் கீழே அறுந்து விழுந்து விடுமோ என்ற அச்சத்துடன் கடக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தொங்கிய படி காணப்படும் மின்சார கம்பிகளை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாண்டியன், ஓம் சக்தி நகர், மதுரை.

சாலை வசதி தேவை

மதுரை அன்னை தெரசா வீதி கோவில்பாப்பாகுடி ஊராட்சி ஒன்றியம் சாலை சேதமடைந்து உள்ளது. பொதுமக்கள் சாலையில் நடக்க வாகனங்களில் பயணிக்க முடியாமல் மிகவும் அவதியடைகின்றனர். எனவே மழைநீர் தேங்காமல் இருக்கவும் சாலையை சீரமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சபரி, மதுரை.

தார்ச்சாலை வேண்டும்

மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டில் சில குறிப்பிட்ட தெருக்களில் சாலைகள் பல ஆண்டுகளாக போடப்படவில்லை. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இந்த பகுதியில் சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சலாவுதீன், மதுரை.

தெருநாய்கள் தொல்லை

மதுரை பெத்தானியாபுரத்தில் உள்ள தெருக்களில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் அச்சத்துடனே வெளியே சென்றுவருகின்றனர். எனவே இந்த பகுதியில் தொல்லை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கருப்பையா, பெத்தானியாபுரம்.

சுகாதார சீர்கேடு

அழகர்கோவில் கோட்டைவாசல் வெளியே குப்பை மற்றும் உணவுக்கழிவுகளை கொட்டுகின்றனர். இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடாக காட்சியளிக்கிறது. எனவே இந்த பகுதியில் குப்பைகளை கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெயமணி, அழகர்கோவில்.

நடவடிக்கை எடுக்கப்படுமா?

மதுரை ஒத்தக்கடை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு யானைமலை அருகில் கொடிக்குளம் ஊராட்சி பகுதியில் விளையாட்டு மைதானம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இங்கு கழிவு நீர் மற்றும் குப்பைகள் சூழ்ந்து மாசற்று குளம் போல் விளையாட்டு மைதானம் காட்சி அளிக்கிறது. இதனால் அரசு பள்ளி மாணவர்கள் விளையாட்டு போட்டிக்கு பயிற்சி பெற முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே இந்த விளையாட்டு மைதானத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாண்டியன், ஒத்தக்கடை.

குடிநீர் திருட்டு தடுக்கப்படுமா?

மதுரை மாநகராட்சி 30 - வது வார்டு மதிச்சியம் முத்து தெரு பகுதியில் சிலர் தொடர்ந்து மின்மோட்டார் மூலம் குடிதண்ணீரை உறிஞ்சி எடுத்து வருகின்றனர். இதனால் தெருவில் உள்ள குழாய்களில் தண்ணீர் வருவதில்லை. குடிதண்ணீர் பிரச்சினையால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். எனவே குடிநீர் திருட்டை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அன்புமணி, மதுரை.

தொற்றுநோய் பரவும் அபாயம்

மதுரை வடக்கு தொகுதிக்கு உட்பட்ட 24-வது வார்டு மீனாம்பாள்புரம் செல்லூர்-குலமங்கலம் இணைப்பு பாலத்தில் குப்பை, கழிவுகளை கண்மாய் கரையோரம் கொட்டுகின்றனர். இதனால் இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அபுபக்கர், மதுரை.

சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்

மதுரை எல்லீஸ்நகர் 60-வது வார்டு பகுதியில் கால்நடைகள் சாலையில் சுற்றித்திரிகின்றன. இந்த கால்நடைகளால் வாகனஓட்டிகள் சாலையில் பயணிக்க முடியாமல் அவதியடைகின்றனர். மேலும் அவ்வப்போது சிறு, சிறு விபத்துகளும் நிகழ்ந்தவண்ணம் உள்ளது. எனவே வாகனஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், மதுரை.

கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

விருதுநகரில் இருந்து மதுரைக்கு மதிய வேளைகளில் குறிப்பிட்ட அளவே பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் இங்கிருந்து பயணிக்கும் பயணிகள் காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பயணிகளின் நலன்கருதி இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முத்துராஜ், விருதுநகர்.


Next Story