புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
விபத்து அபாயம்
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாலைகளில் மாடுகள், ஆடுகள் மற்றும் நாய்கள் போன்ற கால்நடைகள் அதிக அளவில் சுற்றி திரிகின்றன. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். அடிக்கடி விபத்துககளில் சிக்கி சில கால்நடைகளும் உயிரிழக்கின்றன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுப்பிரமணி, இளையான்குடி.
பயிர்கள் சேதம்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள ஒடுவன்பட்டி, பிரான்மலை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள தென்னை மரங்களை அருகில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து குரங்குகள், காட்டு அணில்கள் சேதப்படுத்தி வருகின்றன. இவைகள் தேங்காய்கள் மற்றும் இளநீரையும் சூறையாடுகின்றன. எனவே இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சிங்கம்புணரி.
ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள செஞ்சை நாட்டார் மங்கலம் கண்மாயில் அதலை செடிகள் ஆக்கிரமித்தும் புதர்கள் மண்டியும் காணப்படுகிறது. இதனால் கண்மாயில் இருந்து வெளியேறும் தண்ணீரானது துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இந்த நீரை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழல் உருவாகி உள்ளது. எனவே ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், காரைக்குடி.
சுகாதார சீர்கேடு
சிவகங்கை நகராட்சி வார்டு -6 பவுண்டு தெரு சாலையில் பைப் உடைந்த நிலையில் கழிவுநீர் துர்நாற்றத்துடன் வெளிவருகிறது. இதனால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் அவதிப்படுவதுடன் அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்துகிறது. எனவே குழாய் உடைப்பினை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாஸ்கரன், சிவகங்கை.
புதிய கட்டிடம் வேண்டும்
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் தெப்பக்குளத்தின் தெற்குகரை பகுதியில் உள்ள ரேஷன் கடை கட்டிடத்தின் ஒருபக்க சுவர் அரிப்பு ஏற்பட்டு உள்ளது. இங்கு பொருள்கள் வாங்க வரும் பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சக்திகுமார், காளையார்கோவில்.