புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 19 Dec 2022 12:15 AM IST (Updated: 19 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சிவகங்கை

சேதமடைந்த சாலை

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாலை ஆங்காங்கே சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் வாகனங்களும் அவ்வப்போது சிறு சிறு பழுதுகளை சந்தித்து வருகிறது. எனவே இந்த பகுதியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், சிங்கம்புணரி.

நடவடிக்கை தேவை

சிவகங்கை மாவட்டம் சிவபுரிபட்டி ஊராட்சியில் உள்ள பள்ளி முன்பு கழிவுநீர் கால்வாய் செல்கிறது. இதில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் மாணவர்கள் மூக்கை பிடித்து செல்லும் நிலை உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மருதுபாண்டி, சிங்கம்புணரி.

புதிய கட்டிடம் வேண்டும்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா மடப்புரம் ஊராட்சி வைகைவடகரை பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த கட்டிடம் சேதமடைந்து உள்ளதால் மழைக்காலங்களில் மழைநீர் உள்ளே வருகிறது. இதனால் இந்த அங்கன்வாடி மையத்தில் படிக்கும் குழந்தைகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அங்கன்வாடி மையத்திற்கென புதிய கட்டிடம் கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கார்த்திகேயன், வைகைவடகரை.

நாய்கள் தொல்லை

சிவகங்கை நகராட்சி பகுதியில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சாலையில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் துரத்துவதால் பொதுமக்கள் சாலையில் செல்லவே அச்சமடைகின்றனர். மேலும் வாகனஓட்டிகளின் வாகனங்கள் மீது நாய்கள் மோதுவதால் சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்து வருகிறது. எனவே தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தங்கராஜ், சிவகங்கை.

கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து காளையார்கோவிலுக்கு குறிப்பிட்ட அளவே பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த வழியாக பயணிக்கும் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகளின் அன்றாட வேலைகள் பாதிக்கப்படுகின்றது. எனவே இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெங்கட்ராஜ், காளையார்கோவில்.


Next Story