புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 23 Jan 2023 12:15 AM IST (Updated: 23 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சிவகங்கை

நோய் பரவும் அபாயம்

சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலம் வடக்கு தெருப்பகுதியில் உள்ள சாலையில் தண்ணீர் குழாய் உடைந்து சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதன் மூலம் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுபஸ்ரீ, பட்டமங்கலம்.

பயணிகள் குழப்பம்

சிவகங்கை மாவட்டத்தில் இயங்கும் உள்ளூர் பஸ்களில் இருபுறமும் ஊர் பெயர்கள் வெவ்வேறாக உள்ளது. ஆனால் அந்த பஸ்கள் செல்லும் ஊரும் வெவ்வெறாக உள்ளது. இதனால் பயணிகள், மற்றும் முதியவர்கள் மிகவும் குழப்பம் அடைந்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இளங்கோ, சிவகங்கை.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

சிவகங்கை நகரில் சாலையோர நடைபாதைகள் மற்றும் கடைத்தெருக்களில் சிலர் ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனர். இதனால் நடந்து செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

வேலன், சிவகங்கை.

நடவடிக்கை தேவை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சில இடங்களில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதனால் அந்த வழியாக கனரக வாகனங்கள் செல்லும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விபரீதம் ஏற்படும் முன் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், காரைக்குடி.

கொசுத்தொல்லை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொசுக்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முத்துக்குமார்,தேவகோட்டை.


Next Story