புகார் பெட்டி
புகார் பெட்டி
விபத்து அபாயம்
விவேகானந்தபுரத்தில் இருந்து அஞ்சுகிராமம் செல்லும் சாலையில் ஆரோக்கியபுரம் உள்ளது. இந்த பகுதியில் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு தொலைபேசி கம்பம் சாலையின் உட்புறமாக சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சாய்ந்த நிலையில் காணப்படம் கம்பத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆர்.சந்திரசேகரன், சந்தையடி.
மின்விளக்கு தேவை
கொல்லங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட ஊரம்பு பகுதியில் இருந்து கொல்லங்கோடு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் புன்னமூட்டுக்கடை பகுதியில் சாலையோரங்களில் மின்விளக்கு அமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக இரவு நேரம் வாகனத்தில் செல்லும்வாகன ஒட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பெண்கள் நலன் கருதி சாலையோரங்களில் போதிய மின்விளக்குகளை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆஷ்மி, புன்னமூட்டுக்கடை.
சீரமைக்கப்படுமா?
கல்லுக்கூட்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட கோணங்காடு கோட்டவிளை சந்திப்பு பகுதி உள்ளது. இந்த பகுதியில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள், பள்ளி மாணவ-மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆல்வின்ராஜ், ஆலுவிளை.
சுகாதார சீர்கேடு
அழகியபாண்டியபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட மேல்கரைகாலனி உள்ளது. இந்த பகுதியில் சாலையோரத்தில் கழிவுநீர் ஓடை அமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால், வீடுகளில் இருந்து வெளியேற்றபடும் கழிநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் ஓடை அமைத்து சாலையில் கழிவுநீர் பாய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வேலுச்சாமி, மேல்கரை காலனி.
சேதமடைந்த நீர்தேக்கத்தொட்டி
மேலகிருஷ்ணன்புதூர் ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டி பலஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது தொட்டி சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. தொட்டி பகுதியில் சிறுவர்கள் விளையாடுவார்கள். இதனால், அந்த பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். எனவே, சேதடைந்து காணப்படும் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியை இடித்து அகற்றி விட்டு புதிய நீர்த்தேக்க தொட்டி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முகேஷ், மேலகிருஷ்ணன்புதூர்.
மூடி இல்லாத குடிநீர் தொட்டி
நாகர்கோவில் மாநகராட்சி உட்பட்ட குளத்தூரில் மேல்நிலை நீர்த்தேக்த் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்த தொட்டியில் மூடி இல்லாமல் திறந்த நிலையில் காணப்படுகிறது. இதனால், பறவைகள் தொட்டிக்குள் தஞ்சமடைவதுடன், தண்ணீல் விழுந்து இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன்கருதி மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிக்கு மூடி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜோஸ், குளத்தூர்.
சாலையை சீரமைக்க வேண்டும்
பார்வதிபுரத்தில் இருந்து கணியாகுளம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் பாயும் கால்வாயின் மறுபுறம் 2 டாஸ்மாக் கடைகள், குடியிருப்புகளும் அமைந்துள்ளது. இந்த சாலை மிகவும் குறுகியதாகவும், சேதமடைந்து போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையிலும் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளி மாணவ-மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருதுடன் கால்வாயிக்குள் விழுந்து விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விஜயலட்சுமி, பார்வதிபுரம்.