புகார் பெட்டி


புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மதுரை

வேகத்தடை வேண்டும்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள தென்கரையில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே சாலையில் வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அப்பகுதியில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கவுரிநாதன், தென்கரை, மதுரை.

நடவடிக்கை தேவை

மதுரை மாட்டுதாவணி மேலூர் சாலையின் ஓரமாக குழாய் பதிப்பதற்கு தோண்டப்பட்ட பள்ளம் சரிவர மூடப்படவில்லை. மேலும் சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

அ.பீர்மைதீன், மதுரை.

மின்தடை

மதுரை மாவட்டம் பொதும்பு பகுதியில் உள்ள ஆவின்நகர் 2-வது தெருவில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள முதியவர்கள், குழந்தைகள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். தற்போது கல்லூரிகளுக்கு தேர்வு நடைபெற்று வரும் சமயத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் மாணவர்கள் கல்வி பயில முடியாத நிலை உள்ளது. எனவே தடையின்றி மின்சாரம் வழங்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், பொதும்பு.

சேறும், சகதியுமான சாலை

மதுரை மாவட்டம் எஸ்.ஆலங்குளத்தில் இருந்து குலமங்கலம் செல்லும் பிரதான சாலை மேடும், பள்ளமாக உள்ளதால் சாலையில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. மேலும் வாகன ஓட்டிகள் இவ்வழியே செல்லும் போது விபத்திலும் சிக்குகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், மதுரை.

பொதுமக்கள் அவதி

மதுரை மாவட்டம் திருமங்கலம் அசோக் நகர் பகுதியில் சிலர் குப்பைகளை சாலையில் கொட்டுகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லவும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், திருமங்கலம்.


Next Story