புகார் பெட்டி
புகார் பெட்டி
நடவடிக்கை தேவை
அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கவர்குளம் தேரிவிளை ஊரில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் வரவில்லை. இதனால், அந்த பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி குடிநீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம்தாஸ், சந்தையடி.
விபத்து அபாயம்
நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதி எப்போதும் வாகன போக்குவரத்துடன் பரபரப்பாக காணப்படும். இந்த பகுதியில் உள்ள பெரியதெருவின் சாலையோரத்தில் கழிவுநீர் ஓடையின் மீது அமைக்கப்பட்டுள்ள சிமெண்டு சிலாப்புகள் சேதமடைந்து திறந்த நிலையில் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் நிலைத்தடுமாறி கழிவுநீர் ஓடைக்குள் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஓடையின் மீது சிெமண்டு சிலாப்புகள் அமைத்து விபத்து ஏற்படாமல் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவசுப்பிரமணியன், வடிவீஸ்வரம்.
நடவடிக்கை எடுப்பார்களா?
நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ சாலையில் அமைந்துள்ள தேசிய மயமாக்கப்பட்டு வங்கி அமைந்துள்ளது. இந்த வங்கியின் எதிரே சாலையில் பலர் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால், அங்கு போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. எனவே, அந்த பகுதியில் வாகனங்கள் நிறுத்துபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
-காளியப்பன், இறச்சகுளம்.
பழுதடைந்த மின்விளக்கு
நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் அரசு பள்ளியின் எதிரே சாலையோரத்தில் ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. எப்போது வாகன போக்குவரத்துடன் காணப்படும் இந்த சாலையில் மின்கம்பத்தில் விளக்கு பழுத்தடைந்து எரியாமல் காணப்படுகிறது. இதனால், இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பழுதடைந்த மின்விளக்கை அகற்றி விட்டு புதிய மின்விளக்கை பொருத்தி எரியவைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வே.கார்த்திக், கோட்டார்.
தூர்வார வேண்டும்
குளச்சல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வெள்ளியாகுளம் உள்ளது. இந்த குளத்தை அந்த பகுதி மக்கள் பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தனர். குளத்தை முறையாக பராமரிக்காததால் செடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால், குளத்தை அந்த பகுதி மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை ஆக்கிரமித்துள்ள செடிகளை அகற்றி தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரவி, குளச்சல்.
சுகாதார சீர்கேடு
நாகர்கோவில் பழைய ஆற்றின் ஷட்டர் பகுதியில் ஒழுகினசேரி சுற்றுவட்டார பகுதியில் உள்ள கழிவுநீர் கலக்கிறது. இந்த பகுதியில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி காணப்படுகிறது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, கழிவுளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஐ.தங்கப்பன், புரவச்சேரி.
எரியாத தெருவிளக்கு
கிருஷ்ணன்கோவில் கைலாஷ் கார்டன் 2-வது தெருவில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தில் தெருவிளக்கு பழுதடைந்து எரியாமல் காணப்படுகிறது. இதனால், இரவு நேரம் பெண்கள், குழந்தைகள் அச்சத்துடனேயே வெளியே சென்று வருகின்றனர். எனவே, பழுதடைந்த விளக்கை அகற்றி விட்டு புதிய மின்விளக்கை பொருத்தி எரிய வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவசுப்பிரமணியன், நாகர்கோவில்.