புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
போக்குவரத்து இடையூறு
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக சாலையில் பொதுமக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபயிற்சி செய்கின்றனர். இவர்களில் சிலர் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வண்ணம் சாலையின் நடுவே செல்கின்றனர். இதனால் வாகனஓட்டிகள் சிறு, சிறு விபத்துகளில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே சாலையில் நடைபயிற்சி மேற்கொள்வதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விஷ்ணு, ராமநாதபுரம்.
நாய்கள் தொல்லை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கமுதி பால் கடை மெயின் ரோட்டில் இருந்து கிழக்கு தெரு, பெரியகாடு வரை தெருநாய்களின் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. சாலையில் நடந்து செல்பவர்களை நாய்கள் கடிக்க துரத்துவதால் சிலர் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
மவுளானா, கீழக்கரை.
வாகன ஓட்டிகள் அவதி
ராமநாதபுரம் நகரில் சில இடங்களில் சாலை குண்டும், குழியுமாக மோசமான நிலையில் உள்ளது. மேலும் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
கண்ணன், ராமநாதபுரம்.
குடிநீர் வசதி வேண்டும்
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் ஊராட்சி பூவோடை மற்றும் பழங்கோட்டை பகுதியில் 200-க்கும் அதிகமான குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் போதிய குடிநீர் வசதி செய்து தரப்படாததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்
வேல்முருகன், தேவிப்பட்டினபுகார் பெட்டிபுகார் பெட்டிம்.
பொதுமக்கள் சிரமம்
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி கிராமங்களில் உள்ள விசேஷ நிகழ்ச்சிகளுக்கு சிலர் கூம்பு வடிவ ஒலி பெருக்கியை உபயோகிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகள் என அனைத்து தரப்பினரும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?
பொதுமக்கள், ஆர்.எஸ். மங்கலம்.