தியாகதுருகம் அரசு பள்ளியில் புகார் பெட்டி
காவல்துறை சார்பில் தியாகதுருகம் அரசு பள்ளியில் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி
கண்டாச்சிமங்கலம்,
சட்டத்தை மீறி கஞ்சா மற்றும் சாராயம் உள்ளிட்டவற்றை யாரேனும் விற்பனை செய்தால் அது குறித்த தகவலை போலீசாருக்கு, மாணவ-மாணவிகள் தெரிவிக்கும் வகையில் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு புகார் பெட்டி அமைக்க கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி தியாகதுருகம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புகார் பெட்டி வைக்கப்பட்டது. அப்போது பள்ளி தலைமை ஆசிரியை சசி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் (பயிற்சி) மணி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரபேக்கால், தனிப்பிரிவு போலீசார் ஆறுமுகம் மற்றும் மாணவிகள் உடன் இருந்தனர். இதே போல் தியாகதுருகம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட 6 இடங்களில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளதாக போலீஸ்காரர் ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story