விதிகளை மீறி அனுமதி கொடுத்ததாக புகார்: ஓய்வுபெறும் நாளில் அதிகரட்டி பேரூராட்சி செயல் அலுவலர் பணியிடை நீக்கம்
விதிகளை மீறி அனுமதி கொடுத்ததாக புகார்: ஓய்வுபெறும் நாளில் அதிகரட்டி பேரூராட்சி செயல் அலுவலர் பணியிடை நீக்கம்
நீலகிரி
ஊட்டி
ஊட்டி அருகே உள்ள அதிகரட்டி பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றியவர் ஜெகநாதன். இவர் சில மாதங்களுக்கு முன்பு தான் கோவை தொண்டாமுத்தூரில் இருந்து பணிமாறுதலாகி வந்தார். இந்தநிலையில் அங்கு பணியாற்றிய போது லே-அவுட் அமைக்க விதிகளை மீறி அனுமதி கொடுத்ததாக ஜெகநாதன் மீது புகார் எழுந்தது. இதையடுத்து கோவை கலெக்டர், அதிகரட்டி பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றிய ஜெகநாதனை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து அவர் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக தலைமை செயலகத்தில் இருந்து உத்தரவு வந்தது. நேற்று ஓய்வு பெறும் நாளில் அதிகரட்டி பேரூராட்சி செயல் அலுவலர் ஜெகநாதன் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story