அரசு வழங்கிய நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதாக புகார்


அரசு வழங்கிய நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதாக புகார்
x

இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியவர்களுக்கு அரசு வழங்கிய நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதாக புகார் கூறப்பட்டது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் தாமரைக்குளம் பகுதியில் 1964-ம் ஆண்டு இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியவர்களுக்கு தென்னை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தலா 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. ராமு என்பவருக்கு வழங்கப்பட்ட நிலத்தில் அவருடைய வாரிசுதாரர்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். அரசு வழங்கிய இலவச நிலத்தை அபகரிக்க திட்டமிட்டு இந்த பகுதியை சேர்ந்த சிலர் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த மாதம் உச்சிப்புளி போலீசார் துணையோடு பொக்லைன் எந்திரம் மூலம் அங்கு குடியிருந்த 4 வீடுகளையும் இடித்து தரைமட்டமாக்கி விட்டார்களாம். இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட ராமு என்பவரின் வாரிசுதாரர்கள் நேற்று காலை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் வந்து இதுகுறித்து மனு அளித்தனர். அந்த மனுவில் தங்களுக்கு அரசு வழங்கிய இலவச நிலத்தை அபகரிக்க முயற்சி செய்து தாங்கள் குடியிருந்த வீடுகளை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு வழங்கிய நிலத்தினை மீண்டும் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறி இருந்தனர்.


Related Tags :
Next Story