வருவாய் துறை அமைச்சர் மீது குறவர் சமுதாய மக்கள் தீண்டாமை புகார்
தமிழக டி.ஜி.பி அலுவலகத்தில் வனவேங்கைகள் கட்சியின் தலைவர் இரணியன் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
சென்னை,
தமிழக டி.ஜி.பி அலுவலகத்தில் வனவேங்கைகள் கட்சியின் தலைவர் இரணியன் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், குறவர் சமுதாயத்திற்கு சமூக பிரதிநிதித்துவம் வழங்குவது தொடர்பாக மனு ஒன்றை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரனிடம் நேரடியாக கொடுப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றதாக குறிப்பிட்டுள்ளார். அங்கு அமைச்சர் தங்களை நாற்காலியில் அமர வைக்காமல் ஒருமையில் பேசியதாக தெரிவித்துள்ளார். மேலும் தான் அமைச்சரை நெருங்கி மனுவின் சாராம்சத்தை கூற முயன்ற போது, தள்ளியே நின்று பேசு என தீண்டாமை செயலில் ஈடுபட்டதாகவும் இரணியன் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே தங்களின் சாதியை காரணம் காட்டி தீண்டாமை செயலில் ஈடுபட்ட அமைச்சர் மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இரணியன் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story