தனியார் நிதிநிறுவனத்தில் முதலீடு செய்து பணம் பெறாதவர்கள் புகார் செய்யலாம்


தனியார் நிதிநிறுவனத்தில் முதலீடு செய்து பணம் பெறாதவர்கள் புகார் செய்யலாம்
x

மதுரை ஞானஒளிவுபுரத்தில் இயங்கி வந்த தனியார் நிதிநிறுவனத்தில் முதலீடு செய்து பணம் பெறாதவர்கள் புகார் செய்யலாம் என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கூறியுள்ளாா்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மதுரை ஞானஒளிவுபுரம் ஏ.ஏ.ரோடு 2-வது தளத்தில் கதவு எண் 38-ல் கடந்த 2004-ம் ஆண்டு முதல் இயங்கி வந்த கரிமா அக்ரிடெக் என்ற நிறுவனத்தை அதன் நிர்வாக இயக்குனர்கள் பொதுமக்களிடம் தங்களது நிதிநிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிகவட்டியுடன் பரிசுகளை தருவதாக பல திட்டங்களை கூறி மக்களை முதலீடு செய்ய செய்துள்ளனர். இதன்படி தமிழகத்தில் பல இடங்களில் இருந்தும் இந்த நிறுவனத்தில் மக்கள் முதலீடு செய்தனர்.ஆனால் நிதிநிறுவன இயக்குனர்கள் கூறியபடி பணத்தை திரும்ப தராமல் நிதிநிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவாகிவிட்டனர் என விருதுநகரை சேர்ந்த சிவசக்தி மற்றும் 104 பேர் சேர்ந்து சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்குப்பதிவு செய்யும்படி உத்தரவு பெறப்பட்டதின்பேரில் மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து தற்போது புலன்விசாரணையில் உள்ளது.எனவே கரிமா அக்ரிடெக் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தை திரும்ப பெறாதவர்கள் தங்களது புகாரை தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை ராஜப்பாநகர் 1-வது குறுக்குத்தெருவில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்திற்கு நேரில் வந்து கொடுக்கலாம்.மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story