கஞ்சா, கள்ளச்சாராயம் குறித்து புகார் தெரிவிக்கலாம்
கஞ்சா, கள்ளச்சாராயம் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்து உள்ளது.
மதுரை,
கஞ்சா, கள்ளச்சாராயம் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்து உள்ளது.
தீவிர நடவடிக்கை
மதுரை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கஞ்சா, கள்ளச்சாராயம், போதை பொருள் விற்பனையை முற்றிலுமாக ஒழிப்பதற்கு மதுரை மாவட்ட காவல்துறையால் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது போன்ற செயலில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களை கைது செய்து, வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
மேலும் கஞ்சா, கள்ளச்சாராயம், போதை பொருள் விற்பனையை தடுக்கும் நோக்கத்தில் பொதுமக்களிடமிருந்து தகவல் பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ள மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உத்தரவின் பேரில், மதுரை மாவட்ட தனிப்பிரிவு அலுவலகத்தில் 9498181206 என்ற சிறப்பு தொலைபேசி எண் நிறுவப்பட்டுள்ளது.
தகவல் தெரிவிக்கலாம்
இந்த தொலைபேசி எண்ணுக்கு கஞ்சா, கள்ளச்சாராயம், சட்டத்திற்கு புறம்பான மது விற்பனை, போதை பொருள் விற்பனை குறித்த தகவல் தெரிவித்தால் துரித நடவடிக்கை எடுக்கப்படும். இது போல் தகவல் தருபவர் குறித்த விவரம் ரகசியமாக வைக்கப்படுவதுடன், தகவல் தருபவருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.